இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. மே 2-ம் தேதி 3.68 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று (மே 3) 3.57 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 2 கோடியே 02 லட்சத்து 82 ஆயிரத்தை கடந்தது.

கடந்த 24 மணிநேரத்தில் 3,20,289 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 66 லட்சத்து 13 ஆயிரத்தை தாண்டியது. 34.47 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2,22,408 பேர் உயிரிழந்துள்ளனர்.

Facebook Comments Box
Author: sarath kumar
No