குஜராத்தில் மேலும் 11,017- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

அகமதாபாத்,

குஜராத்தில் மேலும் 11,017- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக இன்று ஒரே நாளில் 102- பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பு காரணமாக இன்று 15,264- பேர் குணம் அடைந்துள்ளனர்.

குஜராத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 14 ஆயிரத்து 611- ஆக உள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 78 ஆயிரத்து 397- ஆக உள்ளது.

தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரமாக உள்ளது. கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 8,731 ஆக உள்ளது.

Facebook Comments Box
Author: sivapriya