சிட்னி நகரை அச்சுறுத்தும் டெல்டா வைரஸ்: கடுமையான ஊரடங்கு நீட்டிப்பு

டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் குறையாததால் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மேலும் ஒரு வாரத்திற்கு கடுமையான ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸுக்கு உட்பட்ட சிட்னி நகரில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டதால் கடந்த மாதம் 26ஆம் தேதி முதல் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதனால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். எனினும் நாளுக்கு நாள் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருப்பதால் வரும் 16ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Author: sivapriya