வாழ்வின் இறுதிவரை எப்படி இருப்பீர்கள் என சொல்லும் அதிசயம் !! நட்சத்திர கணிப்பு கூறும் அதிசய உண்மைகள் என்னென்ன தெரியுமா !!

பிறப்பை பொறுத்தவரையில் அவர்கள் பிறந்த நட்சத்திரத்தின் படி ஒவ்வொருவரின் குணாதிசயமும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். வேத கால ஜோதிடப்படி கோள்களின் கிரக நிலையை கணக்கிட்டு ஒருவரின் பிறப்பு முதல் இ ற ப் பு வரையிலான ஜோதிடம் கணிக்கப்படுகிறது. அதே வேளையில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு தனித்துவமான பண்பு காணப்படுகின்றது.

பிறக்கின்ற ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு குண இயல்புகளை உடையவர்களாக பிறக்கின்றார்கள். இந்த உலகில் பிறகும் ஒவ்வொரு உயிரினமும் என்றாவது ஒரு நாள் இ ற ப்பை நோக்கி சென்று தான் ஆகணும்.

நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்பதையும் எவ் வண்ணமாக உங்க ஆயுட் காலம் இருக்க போகின்றது என்பதனையும் அவர்களின் நட்சத்திர கணிப்பு இலகுவாக கூறுகின்றது, உங்க ஆயுள் முடியறவரை எப்படி இருப்பீங்க மற்றும் இது தான் ம ர ண ம் வரை உங்கள் வாழ்க்கை என்பதையும் மிக துல்லியமாக கணித்து சொல்கிறது. அந்த வகையில் உங்களது நட்சத்திர கணிப்பு என்ன சொல்லுகிறது என்பதை இங்கு பார்க்கலாம்.

அஸ்வினி – இவர்கள் அதிதீத ஆற்றல் கொண்டு செயல்படுவார்கள். எப்பொழுதும் சுத்தம் சுத்தம் என்று திரிவார்கள். சுத்தமாக இருக்க வேண்டும் என்பதே இவர்களின் பெரிய நோய். இவர்களின் வேலையே எப்பொழுதும் சுத்தம் செய்து கொண்டே இருப்பது தான். சுத்தவாதிகளாக காட்சியளிப்பார்கள்.

பரணி – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொ டூ ர மா னவராகவும், நன்றியற்றவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு தண்ணீரைக் கண்டாலே அழற்சி. இவர்கள் தங்கள் கருத்துகளை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் கூறுவார்கள். வதந்திகளை பரப்ப வேண்டும் என்றால் இவர்களுக்கு ரெம்ப பிடிக்கும்.

கிருத்திகை – இவர்கள் சரியான கோ ப க்காரர்களாக இருப்பார்கள். எனவே இவர்களுக்கு யாருடனும் நல்ல உறவு இருக்காது. இவர்களைச் சுற்றியுள்ள நிறைய பேருக்கு இவர்கள் மீது பொறாமை குணம் தான் அதிகமாக இருக்கும். ரோகினி – இவர்களுக்கு மத நம்பிக்கை என்பது கிடையாது. அப்படியே இருந்தாலும் பின்தங்கியவராக இருப்பார்கள். மற்றவர்களை குறை கூறுவதைப் பற்றி ஒருபோதும் கவலைப்பட மாட்டார்கள். சமூகத்தில் தங்கள் அந்தஸ்துகளை காட்ட விரும்புவார்கள்.

மிருகசீரிஷம் – இவர்கள் தங்களின் அழகுக்காக புகழ் பெற்று விளங்குவார்கள். இவர்களுக்கு எப்போதும் பொருளாதாரம் மற்றும் தனிப்பட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும். ஆனால் ஒரு போதும் அதை வெளிக்காட்ட மாட்டார்கள். திருவாதிரை – இவர்களால் தங்களைச் சுற்றியுள்ள நபர்களிடம் உணர்ச்சியுடன் செயல்பட இயலாது. இவர்களின் இயல்பு, மனப்பான்மை, வாழ்க்கை இவற்றை சரி செய்ய சிரமப்படுவார்கள். பணம் மற்றும் சொத்துக்களை நினைத்து நிறைய கவலைப்படுவார்கள்.

புணர்பூசம் – இவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள். இவர்கள் தங்கள் மனதை எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்வார்கள். இந்த நட்பு உணர்வால் தொழிலை தவிர்த்து மற்ற விஷயங்களில் எல்லாரையும் எளிதில் நம்பி விடுவார்கள்.

பூசம் – இவர்கள் பெற்றோருக்கு கீழ்படியாதவர்களாகவும், மத வெறுப்பையும் கொண்டு காணப்படுவார்கள். சமூக சட்ட திட்டங்களை மதிக்காதவர்களை இவர்கள் வெறுப்பார்கள்.

ஆயில்யம் – இவர்களுக்கு பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். குடும்பம் மற்றும் நண்பர்களின் தேவையை பொருட்படுத்தாமல் பயணம் செய்து கொண்டு இருப்பார்கள். தங்கள் செல்வங்களை தனிப்பட்ட நலன்களுக்காக மட்டுமே செலவழிப்பார்கள்.

மகம் – இவர்கள் எப்பொழுதுமே நாளை இல்லை என்று வாழ்ந்து வருபவர்கள். அன்றைய நாளை கொண்டாடுபவர்கள். கடவுளுக்கு பயப்படுபவர்கள். மற்றவர்களின் பணம், உணர்ச்சிகள் மற்றும் நம்பிக்கையை ஒருபோதும் ஏமாற்றமாட்டார்கள். அவர்கள் தோல்வியடையும் போது அவர்களுக்கு எப்பொழுதும் ஒரு ஆதரவு தேவைப்படும்.

பூரம் – இந்த நட்சத்திரக்காரர்கள் ரெம்ப புத்திசாலியாக இருப்பார்கள். ஆனால் த ந்திரமாக எதையும் செய்ய இயலாது. இவர்கள் நம்ப முடியாத அளவிற்கு நேர்மையானவராக இருப்பார்கள். சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு இவர்களின் மனம் ஒருபோதும் ஒத்துப் போகாது.

உத்திரம் – இவர்கள் அன்பான இதயம் கொண்டவர்களாக இருப்பார்கள். இது இவர்களுக்கு சமுதாயத்தில் நல்ல புகழை பெற்றுத் தரும். இதனால் எளிதாக தங்கள் வேலைகளிலும், உறவுகளிலும் வெற்றி அடைவார்கள். ஹஸ்தம் – இவர்கள் மத ரீதியில் பாராட்டப்படக் கூடியவராகவும் கல்வியில் சிறந்து விளங்குபவராகவும் இருப்பார்கள். பயணம் சம்பந்தமான தொழிலில் ஈடுபடுவார்கள்.

சித்திரை – இவர்கள் எதிரிகளின் மீது மிகுந்த பக்தி கொண்டவராக இருப்பார்கள். அதனால் எதையும் தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி கொள்வார்கள். உயர் கல்வி படிக்க விரும்புபவராகவும் அறிவு தாகம் கொண்டும் காணப்படுவார்கள்.

சுவாதி – தங்களைச் சுற்றி உள்ள மக்களின் ஆற்றலை நல்வழிக்கி பயன்படுத்திகொள்வார்கள். இது ஒரு சில நேரங்களில் அவர்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும். மாற்றங்களுக்கு வளைந்து கொடுக்க முடியாமல் திணறுவார்கள். இது வாழ்நாள் பிரச்சினையாக மாறும்.

விசாகம் – இவர்களின் செயலுக்கு தீர்வுகள் தாமதம் ஆனாலும் வெற்றிகரமான முடிவை பெறுவார்கள். நீண்ட கால லாபங்களை நோக்குவதால் குறுகிய கால லாபங்களை கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் மற்றவர்களின் வெற்றியை நினைத்து ரகசியமாக பொறாமைப்படுவார்கள். இவர்களுக்கு பெரிய சமூக வட்டம் பிடிக்காது. அது கசப்பையும் ஆ த் திரத்தையும் வரவழைக்கும்.

அனுஷம் – இவர்களின் மனச்சோர்வால் வாழ்க்கையில் நிறைய தடைகளை சந்திப்பார்கள். பெற்றோருடான உறவை து ண் டித்து கொ ள் வா ர்கள். உடல் நலத்தையும் உணவுப் பழக்கத்தையும் கவனமாக பார்க்க வேண்டும்.

கேட்டை – இவர்கள் நல்ல உடல் பலத்துடன், நல்ல உடல் தோற்றத்துடன் காணப்படுவர். வாழ்க்கையில் நிலையானவற்றில் இவர்கள் கவனம் இருக்காது. எப்பொழுதும் தொழிலை மாற்றியமைத்து கொண்டே இருப்பார்கள்.

மூலம் – இவர்கள் ஒரு வளமான வாழ்க்கையை வாழ்வார்கள். பயணத்தின் போதே நிறைய அறிவை பெறுவார்கள். இவர்கள் சமாதானத்தை விரும்பும் நபர்களாகவும், சமாதானத்தை தடுக்கக் கூடியவர்களுக்கு வன்முறையானவர்களாகவும் இருப்பார்கள்.

பூராடம் – இவர்கள் வாதங்களில் ஈடுபட்டு தங்கள் புத்திசாலி தனத்தை நிரூபிக்க முயற்சி செய்வர். முடிவுகளை எடுப்பதில் சிரமப்படுகிறார்கள். உத்திராடம் – இவர்கள் வேலைவாதியாக இருந்தாலும் ஆர்வம் இல்லாவிட்டால் சோம்பேறியாகவும், உள்நோக்கம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எளிதாக யாரையும் நம்ப மாட்டார்கள். திருவோணம் – இவர்களுக்கு புனிதப் நூல்கள், வசனங்கள் பிடிக்கும். இவர்கள் எதிரிகளை தங்களுடைய பொறுமை, அறிவைக் கொண்டு அழிக்க முற்படுகின்றனர். மற்றவர்கள் தங்களை விட உயர்ந்தவர்களாக எண்ணுகிறார்கள். இதனால் மற்றவர்களின் உதவியையும் விசுவாசத்தையும், மரியாதையையும் இழக்கிறார்கள்.

அவிட்டம் – இவர்கள் எப்பொழுதும் கோபப்பட்டு குற்றவாளியை அடியோடு அழிக்க துடிப்பார்கள். தாமதமான அல்லது மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வை பெறுவார்கள். சதயம் – இவர்கள் பார்ப்பதற்கு எளியவர்கள். ஒரு கொள்கையோடு நேராக வாழ்பவர்கள். இவர்கள் துணிச்சலாக இருப்பதோடு உலகத்தைப் பற்றி கவலைப்படாமல் சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்துவார்கள். பூரட்டாதி – உலகத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்துவது போன்று உயர்ந்த காரணங்களுக்காக தங்களை தியாகம் செய்வார்கள். தொண்டு என்று வரும் போது நடைமுறை செயல்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். சூழ்நிலைக்கு இணக்கமானவர்களாகவும், மாற்றியமைப்பவராகவும் இருப்பார்கள்.

உத்திரட்டாதி – இந்த நபர்கள் அறிவை சக்தியாக கொண்டவர்கள். பயணத்தின் மூலம் அறிவை பெறுவார்கள். விரைவிலேயே பிறப்பிடத்தை விட்டு வெளியே செல்ல ஆரம்பித்து விடுவார்கள். தங்களை நேசிப்பவர்களுக்காக தங்கள் உயிரையும் தியாகம் செய்ய தயங்க மாட்டார்கள்.

ரேவதி – இவர்கள் ரெம்ப பிடிவாதக்காராகவும், சீக்கிரம் கோ பப்படும் நபராகவும் இருப்பார்கள். கடவுள் நம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் பிரச்சினைகளை தங்கள் தலையில் தூக்கி போ ட் டுகொ ள்வதால் இவர்களின் உடல் நலம் எளிதில் பா திக்கப்படும்..

Author: admin