மத்திய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு: பிரதமர் மோடிக்கு கூடுதல் பொறுப்பு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின்படி 43 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் புதுமுகங்கள், இணையமைச்சர்களாக இருந்தவர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பெண்கள், பொறியாளர்கள் மற்றும் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர்களுக்கு இம்முறை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையை பிரதமர் கூடுதலாக கவனிக்க உள்ளார். உள்துறை அமைச்சரான அமித்ஷா கூட்டுறவுத்துறையை கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சரான அமித்ஷா கூட்டுறவுத்துறையை கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹர்தீப் சிங் புரி – பெட்ரோலியம், ஊரக வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித் துறை

ஜோதிராதித்ய சிந்தியா – விமான போக்குவரத்துத் துறை

பியூஸ் கோயல் – ஜவுளித்துறை, வர்த்தகம் மற்றும் நுகர்வோர் நலத்துறை

அனுராக் தாக்கூர் – தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறையுடன் இளைஞர் நலனும் ஒதுக்கீடு

ஸ்மிருதி இரானி – பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையுடன் தூய்மை இந்தியா திட்டமும் ஒதுக்கீடு

மன்சுக் மாண்டவியா – சுகாதாரத்துறை, உரம் மற்றும் ரசாயனத்துறை

தர்மேந்திர பிரதான் – கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை

அஷ்வின் வைஷ்ணவ் – ரயில்வேத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்புத்துறை

எல்.முருகன் – தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர், மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர்

கிரண் ரிஜ்ஜூ – சட்டத்துறை

கிரண் ரெட்டி – வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி; கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை

வீரேந்திர குமார் – சமூகநீதி, மேம்பாட்டுத்துறை

ராமச்சந்திர பிரசாத் சிங் – எஃகுத்துறை அமைச்சர்

பூபேந்தர் யாதவ் – சுற்றுச்சூழல், வனம், தொழிலாளர், வேலைவாய்ப்புத்துறை

ராஜ்குமார் சிங் – மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை

நாராயண் ரானேவுக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை

சர்பானந்த சோனாவால் – துறைமுகம், கப்பல், ஆயுஷ்துறை

Author: sivapriya