இன்றைய ராசி பலன் – 09-07-2021

மேஷம்:

Mesha rasi palan

மேஷ ராசிக்கு இன்றைய ராசி பலன் படி புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். பிள்ளைகளால் செலவுகள் ஏற்பட்டாலும் அவசியமான செலவுகளாகவே இருக்கும். ஒரு சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். ஒரு சிலருக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப் பதால் சோர்வு ஏற்படக்கூடும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.

ரிஷபம்:

Rishaba rasi palan

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். ஆனால், குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று புதிய முயற்சிகளைத் தொடங்கலாம்.

மிதுனம்:

Mithuna rasi palan

காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் காணப்படுவீர்கள். தாய்வழி உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் அதிகரிக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய் வழி உறவினர்களால் நன்மை ஏற்படும்.

கடகம்:

Kadaga rasi palan

தெய்வ அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். சிலருக்கு தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். ஆனால், உடல் நலனில் கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும், சக ஊழியர்களின் உதவியுடன் முடித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு இருக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

சிம்மம்:

Simma rasi palan

புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். வெளியூரில் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும். தாய்வழி உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.

கன்னி:

Kanni rasi palan

மனதில் தைரியம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்கிவிடுவது சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணைவழியில் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வெளியூர்ப் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். பிற்பகலுக்கு மேல் உடல் நலனில் கவனம் தேவை. தாயின் தேவைக்காக செலவு செய்யவேண்டி வரும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை சற்றுக் குறைவாகவே இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணம் வாங்கும் யோகம் உண்டாகும்.

துலாம்:

Thulam rasi palan

வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். எதிர்பாராத செலவுகளைச் சமாளிக்கக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத பயணங்களுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு மகான்களின் தரிசனமும், அவர்களின் ஆசிகளைப் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பணியாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆலயங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

விருச்சிகம்:

Viruchiga rasi palan

குடும்பம் அல்லது வேலை தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை இன்றைக்குத் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சிலர் கடன் வாங்கவும் நேரிடும். மற்றவர்களிடம் பேசும்போது நிதானம் அவசியம். வெளியில் செல்லும்போது கைப்பொருள்களை பத்திரமாக வைத்துக்கொள்ளவும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

தனுசு:

Dhanusu rasi palan

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

மகரம்:

Magara rasi palan

உற்சாகமான நாள். புதிய முயற்சிகளைக் காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. பிற்பகலுக்கு மேல் எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதுடன் செலவுகளையும் ஏற்படுத்தும். பிள்ளைகள் வழியில் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு இருக்காது.அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் உதவியுடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

கும்பம்:

Kumba rasi palan

எதிலும் அவசரமில்லாமல் செயல்படவேண்டிய நாள். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மீனம்:

Meena rasi palan

பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் ஏற்படும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடிவதற்கு வாய்ப்பு ஏற்படும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். அரசாங்க அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி இழுபறிக்குப் பிறகு கிடைக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும்.

Author: admin