இந்த 4 ராசிக்காரர்களிடம் இருந்து சற்று தள்ளியே இருக்க வேண்டுமாம்! ஏன்? எதனால்? என்று நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டுமா? பழிக்குப் பழி வாங்குபவர்களா அவர்கள்?

பொதுவாக ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருப்பது வழக்கம் தான். அப்படிப்பட்ட குணாதிசயங்களில் இந்த நான்கு ராசிகாரர்களுக்கு பழிக்கு பழி வாங்கக்கூடிய புத்தி நிறையவே இருக்கிறதாம்! ஒரு சிலர் எல்லாம் எவ்வளவு பெரிய விஷயங்களையும் கூட மன்னித்து விடுவது உண்டு. ஆனால் ஒரு சிலர் சிறிய சிறிய விஷயங்களை கூட மனதில் வைத்துக் கொண்டு பழி வாங்கக் கூடியவர்களாக இருப்பார்கள். அப்படியான இந்த 4 ராசிக்காரர்களின் பட்டியலில் நீங்களும் இருக்கின்றீர்களா? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

enemy

பழி வாங்கக் கூடிய புத்தி என்பது நேர்மறையானதல்ல அதற்காக அவர்கள் என்ன செய்தாலும் பொறுத்துக் கொண்டு போக வேண்டிய அவசியமும் இல்லை. துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்னும் பழமொழிக்கு ஏற்ப உங்களுக்கு வேண்டாதவர்களிடமிருந்து நீங்கள் விலகி நிற்பது மட்டுமே நல்ல விஷயமாக இருக்கும். பழி வாங்க போகிறேன் என்கிற பெயரில் நீங்களும் அதையே செய்தால் அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும்? என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.

மிதுனம்:Gemini zodiac sign

மற்ற ராசியினரை விட மிதுன ராசிக்காரர்களுக்கு பழி வாங்கும் புத்தி சற்று அதிகமாகவே இருக்குமாம். ஒருவர் இவர்களுக்கு தீங்கு செய்து விட்டால் உடனே அவர்களை எப்படியாவது பழிக்குப் பழி வாங்கி விட வேண்டுமென்று துடியாய் துடிப்பார்கள். சற்றும் தாமதிக்காமல் அதற்கான முயற்சிகளை செய்து திட்டங்களைக் கூட தீட்டி வைத்து விடுவார்கள். அந்த அளவிற்கு முன்கோபம் அவர்களிடம் ஜாஸ்தியாக இருக்கும். எனவே இந்த ராசியினர் உடன் பழகும் பொழுது சற்று தள்ளி நின்று இருப்பதே நல்லது.

துலாம்:Thulam Rasi

துலாம் ராசியினருக்கு இதே போல முன்கோபம் அதிகம் தான். பல இடங்களில் இவர்கள் மற்றவர்களை புரிந்து கொண்டு செயல்பட்டாலும் இவர்களை நோகடித்து விட்டால் அவர்களை சும்மா விடவே மாட்டார்கள். எப்படியாவது அவர்கள் தங்களுக்கு செய்ததை திருப்பி செய்துவிட வேண்டும் என்று ஆர்வமாக இருப்பார்கள். அப்பொழுது தான் தான் பட்ட கஷ்டம் அவர்களுக்கும் புரியும் என்று முனைப்புடன் அதற்கான முயற்சிகளையும் செய்து விடுவார்கள். மன்னிக்கும் குணம் இவர்களிடம் கொஞ்சம் குறைவு தான் எனவே இவர்களிடம் இருந்து சற்று தள்ளியே இருப்பது நல்லது.

கடகம்:Kadagam Rasi

தேள் போல கொட்டிக் கொண்டே இருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு நினைத்ததை எப்படியாவது சாதித்து விட வேண்டும் என்கிற வைராக்கியம் இருக்கும். அந்த நினைப்பில் தடையாக இருப்பவர்களுக்கு பழிக்குப் பழி தீர்க்க இவர்களை மிஞ்சியவர் யாருமில்லை. அரும்பாடுபட்டு செய்ய நினைக்கும் ஒரு விஷயத்தை தடை செய்யும் அவர்களை ஒழிக்காமல் ஓய்வதே இல்லை என்கிற முடிவுக்கு வந்து விடுவார்கள். எனவே இவர்களிடம் இருந்து சற்று தள்ளி இருப்பது நல்லது.

கும்பம்:Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு சுயநலம் கொஞ்சம் அதிகம் தான். தான் தன்னுடைய குழந்தைகள், உறவுகள் என்று தனக்கான ஒரு சிறிய வட்டத்தை கிழித்துக் கொண்டு அதற்குள் வாழும் குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். தானுண்டு தன் வேலையுண்டு இருக்கும் இவர்களை மற்றவர்கள் சீண்ட நினைத்தால் அவர்களை ஒரு கை பார்த்து விடுவார்கள். துரோகம் இழைத்தவர்களை பழிக்கு பழி வாங்குவதில் ராஜ நாகத்தை போன்ற குணத்தைக் கொண்டவர்கள் இவர்கள் எனவே இவர்களிடம் இருந்து சற்று தள்ளி இருப்பதே நல்லது.

Author: admin