அட என்னது ஏசியின் விலை 5, 900 ரூபாய் தானா? அமேசான் ஆஃபரை பார்த்து ஆடிப்போன வாடிக்கையாளர்கள்!

அமோசான் நிறுவனத்தில், ஒரு ஏ.சி ரூ.5,900-க்கு விற்பனை என அறிவித்த நிலையில் ஆர்டர்கள் குவிந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய நவீன உலகில் எந்த ஒரு பொருட்கள் வாங்க வேண்டும் என்றாலும் முதலில் ஆன்லைன் வர்த்தகத்தை மக்கள் தேடுகின்றனர்.

அதிலும், ஆடைகள் முதல் எலக்ட்ரானிக் ஐட்டம் வரை அனைத்துப் பொருட்களும் அமேசானில் தள்ளுபடி விலையில் கிடைக்கும். இந்நிலையில், கடந்த நாட்களுக்கு முன்பு டோஷிபா 2021 மாடல் ஏசியின் மதிப்பான ரூ.96,000-க்கு பதில் ரூ.5,900-க்கு விற்பனை என அறிவித்து அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால், விசாரித்து பார்த்தால் தான் தெரிகிறது, ரூ.5, 900 தள்ளுபடி என பதிவிடாமல், ரூ.5,900க்கு விற்பனை என தவறாக பதிவிட்டு அமேசானில் வெளியிட்டுள்ளனர். அதனால், பார்த்தால் ரூ.96,000 ஏசி 94% தள்ளுபடியில் பட்டியலிடப்பட்டுள்ளது.

ஆனால் வாடிக்கையாளர்களோ டோஷிபா ஏசி 94% தள்ளுபடியா என வியந்து பலரும் முன்பதிவு செய்தனர். என்னடா இது…? இவ்வளவு ஆர்டரா என அமேசான் உஷாரான பிறகு தான், தனது தவறை ஒப்புக்கொண்டு, ஏசியின் விலையை திருத்தி மீண்டும் ரூ.90,800-க்கு விற்பனை என அறிவித்தது.

ரூ.5,900-க்கு ஏசியை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் பலரும் அமேசான் செய்த விலை மாற்றத்தால் அ.தி.ர்ச்சியும், வருத்ததிற்க்கும் உள்ளாகினர்.

தற்போது அந்த ஏசியின் விலை 59,000 என மாற்றப்பட்டிருக்கிறது. (20% தள்ளுபடி) ஒரு சைபரை கூடுதலாக சேர்த்திருக்கின்றனர். ஆனால் இது குறித்து அமேசான் நிறுவனம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

Author: admin