இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை இலங்கை அரசு நிறுத்தவேண்டும்: இலங்கை எம்.பி சிறீதரன்

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தி, நாட்டில் நல்ல நிலைமையை ஏற்படுத்த வேண்டும் என்று இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி. சிறீதரன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எம்.பி. சிறீதரன், யாழ்ப்பாணம் தீவுப்பகுதிகளை நோக்கி சீனா, பாகிஸ்தான் நிறுவனங்கள் அடியெடுத்து வைப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். நெடுந்தீவில் சீனாவுக்கு 80 ஏக்கர், யாழ் பழைய கச்சேரியில் சீனாவின் புதிய நட்சத்திர விடுதி அமைக்கும் முயற்சிகள் நடப்பதாக குற்றம்சாட்டினார்.

அண்மையில் யாழ்ப்பாணம் வந்த பாகிஸ்தான் தூதுவர் மண்டைத்தீவு, அல்லைப்பிட்டி பகுதிகளை பார்வையிட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறிய சிறீதரன், இலங்கை அரசின் இந்த நடவடிக்கைகள் தமிழ்மக்களை பெரும் இன்னலுக்கு உள்ளாக்கும் என்றும், எத்தனை பிரச்னைகள் என்றாலும், தங்கள் தொப்புள்கொடி உறவான இந்தியாவுடன்தான் ஈழத்தமிழர்கள் நிற்பார்கள் என்றும் உறுதிபட தெரிவித்தார்.

Author: sivapriya