நடிகை முன்னிலையில் கூச்சமில்லாமல் வேட்டியை அவிழ்த்து வீசிய சரத்குமார் !! சட்டென்று நடந்த சம்பவம் !! அதுவும் எந்த நடிகை முன்னால் தெரியுமா ?? !!

25 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான சூர்யவம்சம் திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சரத்குமார் வேட்டியை கழட்டி வீசிச்சென்ற சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் சரித்திர சாதனை படைத்த திரைப்படங்களில் ஒன்று சூரிய வம்சம். விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்த இந்த படம் மாபெரும் வெற்றியைத் தந்தது. சரத்குமார் படப்பிடிப்பிற்கு சொன்ன நேரத்தில் சரியாக வந்து நின்று, நேரத்தினை கடைபிடிப்பவர் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.

சூரியவம்சம் படம் வெளியாகி 25 வருடங்களான நிலையில் சமீபத்தில் சரத்குமாருடன் ஒரு பேட்டி நடைபெற்றது. அதில் சூரியவம்சம் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கலகலப்பான நிகழ்ச்சி ஒன்றை குறிப்பிட்டுள்ளார்.

சூர்யவம்சம் படத்தில் தனது கெட்டப்புக்கான மேக்கப் எல்லாம் முடிந்து தயார் நிலையில் இருந்த சரத்குமாரிடம், உதவி இயக்குனர் வந்து, ஷாட் ரெடியானது தான் வந்து கூப்பிடுவதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

சரி என்று நினைத்த சரத்குமார், தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது உதவி இயக்குனர் சரத்குமாரிடம் கூறிய விடயம் தெரியாமல் இயக்குனர் விக்ரமன் ராதிகாவிடம் சீன் குறித்து பேசிக்கொண்டிருந்த நேரத்தில் சரத்குமார் குறித்து புகார் கூறியுள்ளார்.

என்ன ஹீரோ, எப்போ பார்த்தாலும் பெண் தோழியுடன் போனில் அரட்டை அடித்துக் கொண்டு இருக்கிறாரே தவிர படத்தில் கவனம் இல்லை, ஷாட் ரெடி ஆகி இவ்வளவு நேரமாகியும் ஆளை காணவில்லை என்று சரமாரியாக பேசியுள்ளார். இதனை எதிர்பாராத விதமாக சரத்குமார் பின்னே நின்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தவறு செய்யாத தன்னை விக்ரமன் இவ்வாறு திட்டிய கடுப்பில், சரத்குமார் படப்பிடிப்பில் இருந்த அனைவரிடம் கோபத்தினைக் காட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் கோபம் உச்சிக்கு ஏறியதால், தான் அணிந்திருந்த வேட்டியை கழட்டி வீசிவிட்டு சென்றுள்ளாராம்.

ஆனால் தற்போது வரை எதற்காக வேட்டியை கழற்றி வீசினேன்? என்பதை யோசித்து யோசித்து சிரித்துக் கொண்டே இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Author: admin