அரியலூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினர் போக்சோவில் கைது

அரியலூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் பிள்ளையார்குளம் காலனி தெருவை சேர்ந்தவர், டேவிட் செந்தமிழ்ச்செல்வன் என்ற நபர். கூலி தொழிலாளியான இவர் தனது வீட்டிற்கு விருந்துக்காக வந்திருந்த, மனைவியின் சகோதரியுடைய எட்டு வயது பெண்குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார்.
image
இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுபா, டேவிட் செந்தமிழ்ச்செல்வனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், தான் குடிபோதையில் செய்துவிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார் அந்தநபர். மேலும், தன் மனைவி தன்னுடன் உறவு வைத்துக்கொள்ள மறுத்ததாகவும் அதனால் குடிபோதையில் இவ்வாறு செய்ததாகவும் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் அவர். அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி, குழந்தைகள் தடுப்பு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Author: sivapriya