இலங்கை நாடாளுமன்றம் அருகே அரசுக்கு எதிராக போராட்டம்: 31 பேர் கைது


இலங்கை அரசு கொண்டுவந்துள்ள கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மசோதாவுக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தின் அருகே போராட்டம் நடத்திய 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக போராட்டம் நடத்துவதற்கு இலங்கை அரசு தடைவிதித்துள்ளது. இந்தத் தடையை மீறி போராட்டம் நடத்திய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தை பதிவு செய்த ஊடகவியலாளர்களின் கேமராக்கள் மீது இலங்கை காவல்துறை பெண் அதிகாரிகள் சிலர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

Author: sivapriya