குழந்தைகளுக்குப் பிடித்தமான இந்த காலை உணவை ஒரு முறை செய்து பாருங்கள். பிறகு தினமும் விரும்பி கேட்பார்கள். இதை செய்ய 10 நிமிடம் கூட ஆகாது.

காலை உணவு சமைப்பது என்பது பெண்களுக்கு மிகவும் சிரமமான விஷயம் தான். குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு முன்னர் இருக்கும் சிறிய நேரத்தில் குழந்தைகளுக்கு விருப்பமான உணவை சமைக்க வேண்டும். குழந்தைகளுக்கு விருப்பமானதை சமைத்துக் கொடுத்தால் மட்டுமே காலையில் அவர்கள் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்குச் செல்வார்கள். இப்படி இருக்க, 5 நிமிடத்தில் எவ்வாறு குழந்தைகளுக்குப் பிடித்த உணவை சமைப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்ள இந்த குறிப்பினை தொடர்ந்து படியுங்கள்.

muttai

பல குழந்தைகளுக்கு முட்டை மற்றும் உருளைக்கிழங்கு மிகவும் பிடிக்கும். அதேபோல் முட்டையிலும் உருளைக் கிழங்கிலும் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச் சத்து அதிகம் உள்ளது. இந்த இரண்டு பொருளை வைத்து எவ்வாறு சிறிய நேரத்தில் சுவையான உணவை சமைப்பது என்பதை பற்றி பார்ப்போம்.

இந்த உணவிற்கு தேவைப்படுவது இரண்டு உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கை தண்ணீரில் சுத்தமாக கழுவி அதன் மேலே உள்ள தோலை சுத்தம் செய்து நீக்கிவிட்டு அதனை தேங்காய் சீவல் மூலம் சிறு சிறு துருவல்களாக துருவி எடுக்க வேண்டும். பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் வைத்து சிறிது தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் அப்படியே வைக்க வேண்டும்.

urulai

பிறகு ஒரு பெரிய வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக மிகவும் பொடியாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த வெங்காயத்துடன் நாம் தண்ணீரில் ஊற வைத்துள்ள உருளைக்கிழங்கை நீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்துடன் ஒரு ஸ்பூன் தனியா தூள், ஒரு ஸ்பூன் மைதா மாவு ( மைதா மாவுக்கு பதிலாக கோதுமை மாவு அல்லது சோள மாவு ) சேர்த்துக் கொள்ளலாம். சீரக தூள் அரை ஸ்பூன், மிளகுத்தூள் அரை ஸ்பூன், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவேண்டும். பின்னர் இதனுடன் ஒரு முட்டை சேர்த்து நன்கு கிளற வேண்டும். வேண்டும் என்றால் இரண்டு முட்டை கூட சேர்த்து கொள்ளலாம். இதில் போட்டுள்ள மசாலாக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து வரும் வரை நன்றாக கிளறிக் கொள்ள வேண்டும்.

muttai

அடுப்பில் தோசைக்கல் அல்லது ஒரு பேன் வைத்து அது சூடானதும் கலந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை அதில் ஊற்றி தோசை மாதிரி கரண்டியை வைத்து பரப்பி விட வேண்டும். சிறிது நேரம் கழித்து திருப்பி போட வேண்டும். இதில் நாம் மைதா மாவு சேர்த்திருப்பதால் திருப்பி போடும் போது உடையாமல் வரும். சில நிமிடங்களில் சுவையான உணவு ரெடியாகிவிடும்.

unavu

தயாரான உணவினை ஒரு தட்டில் வைத்து குழந்தைகளுக்கு பிடித்தவாறு டைமன் வடிவில் பீட்சா போன்று கட் செய்து கொடுத்தால் குழந்தைகள் விருப்பமாக அந்த உணவினை சுவைத்து உண்பார்கள். இதனால் காலையில் குழந்தைகளுக்கு சத்தான உணவினை கொடுக்க முடியும். குழந்தைகளின் உடலுக்கு போதுமான அளவு ஊட்டச்சத்து இந்த உணவில் உள்ளதால் அவர்கள் சோர்வில்லாமல் பள்ளியில் அதிக நேரம் இருக்க முடியும்.

Author: admin