அதிஷ்டமும் வசீகரமும் உங்களோடு இருக்க தவமிருக்கும். நீங்கள் குளிக்கும் தண்ணீரில் தினம் தோரும் இதை போட்டுக் குளித்தால்.

எப்போதுமே சீரும் சிறப்புமான வாழ்க்கையை தேடி நாம் செல்ல கூடாது. அந்த சீரும் சிறப்பும், அதிர்ஷ்டம்‌ வசீகரமும் நம்மை தேடி நம்மிடம் வர வேண்டும். அந்த அளவிற்கு நம்மை நாமே அழகாக வசீகரத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது இன்றைக்கு இந்த பதிவில் நாம் படிக்கும் விஷயங்கள் நமக்கு புதியதாக தெரியலாம். ஆனால் இதில் புதியதாக சொல்வதற்கு எதுவுமே கிடையாது. அந்த காலத்தில் ராணிகள், இளவரசிகள் பின்பற்றி வந்த ஒரு பழமையான முறையைப் பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும் பழமையான முறைகளில் சுலபமான முறையும் கூட.

sad

சிலபேருக்கு எந்த நேரமும் மனதிற்குள் எதிர்மறை ஆற்றல் இருந்து கொண்டே தொல்லை கொடுத்து வரும். இந்த எதிர்மறை ஆற்றல் அவர்களுடைய வாழ்க்கையில் நிம்மதியை கொடுக்காது. எதைத் தொட்டாலும் தோல்வி என்று வாழ்க்கையில் தடுமாறிக் கொண்டிருப்பவர்களுக்கும் இந்த பரிகாரம் கைகொடுக்கும்.

சிலபேருக்கு வசீகரத் தன்மை என்பது குறைவாக இருக்கும். சிலபேருக்கு வசீகரத் தன்மை நிறைந்து இருக்கும். அது ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி. சிலரைப் பார்க்கும் போதே அவர்களுடன் போய் பேச வேண்டும் என்று தோன்றும். அவர்கள் சொல்லுவதை எல்லாம் நாம் கேட்க வேண்டும் என்று தோணும். இப்படிப்பட்டவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றிகள் வந்து குவியும். ஆனால் சில பேரை பார்க்கும் போது அவர்களிடம் பேசக்கூடாது அவர்களை ஒதுக்கி வைத்துவிட வேண்டும் என்று தோணும். இது நிறத்தின் அடிப்படையில் சொல்லப்படும் விஷயம் கிடையாது.

இப்படி எல்லோராலும் ஒதுக்கப்படக் கூடிய அந்த நபருக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு விட்டால், அந்த நபரால் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது. மிக மிக கஷ்டமான சூழ்நிலை அது. அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் நிலைமை புரியும். சரி உங்களுக்கும் இது போன்ற கஷ்டங்கள் உள்ளதா. தினமும் நீங்கள் குளிக்கின்ற தண்ணீரில் இந்த பொருளை சேர்க்க வேண்டும். அது எந்த பொருள்.

வாசனை மிகுந்த பன்னீர் ரோஜா தான் அந்த பொருள். ரோஜா இதழ்களை தனித்தனியாக பிரித்து எடுத்து நன்றாகக் கசக்கி சாறு பிழிந்து அந்த தண்ணீரை குளிக்கின்ற தண்ணீரில் கலந்தும் குளிக்கலாம். அப்படி இல்லை என்றால் ரோஜா விழுதை நன்றாக அரைத்து எடுத்து, அந்த விழுதை முகம் கை கால்களில் தேய்த்தும் குளிக்கலாம்.

rose

தினமும் இப்படி செய்தால் வசீகரத் தன்மை கூடும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் வரும். வசீகரம் உங்களை வந்து சேர தவமிருக்கும். நிச்சயமாக இது உண்மை. அந்த காலத்தில் ராஜாக்கள் ராணிகள் பின்பற்றி வந்த முறையும் கூட இது. நிறைய சினிமா படங்களில் கூட பார்த்திருப்போம். ராணிகள் நீராடும் தண்ணீரில் ரோஜா இதழை மிதக்க வைத்திருப்பார்கள்.

bathing

உங்களுக்கும் அதிர்ஷ்டம் வேண்டும். உங்களுக்கும் வசீகரம் வேண்டும். உங்களுக்கும் வாழ்க்கையில் சந்தோஷம் வேண்டும். நீங்களும் ராஜா ராணி இளவரசியைப் போல வாழ வேண்டும் என்றால் நம்பிக்கையோடு இதை பின்பற்றி பாருங்கள். தினமும் ரோஜா பூ கிடைத்தால், தினமும் இந்த குளியலை மேற்கொள்ளலாம். முடியாதவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாள் இப்படி குளித்தாலும் பரவாயில்லை. அது உங்களுடைய விருப்பம் தான். முயற்சி செய்து பாருங்கள். நம்பமுடியாத அதிசயம் உங்கள் வாழ்க்கையில் நிகழும் என்ற கருத்தோடு இந்த பதிவினை இதோடு நிறைவு செய்து கொள்வோம்.

Author: admin