உங்கள் வீட்டு பூஜை அறையில் எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது என்ற சந்தேகம் உங்களுக்கு உண்டா? உங்கள் மனதில் பல காலமாக உள்ள பூஜை அறை சந்தேகங்களுக்கான விடை இதோ

நாம் வழக்கமாக நம் பாரம்பரிய முறையை பின்பற்றியே பூஜை செய்து வருகின்றோம். ஆனால் பொதுவாக பலருக்கும் பூஜை அறையில் எதை செய்யாலாம் எதை செய்யக்கூடாது, இதை செய்தால் தப்பாகிவிடுமோ இப்படி பல சந்தேகங்கள் இருந்துகொண்டே இருக்கும். இப்படி உங்களுக்குள் எழக்கூடிய பல சந்தேகங்களுக்கு தீர்வாய் அமையம் பதிவு தான் இது. வாருங்கள் விடையைத் தேடி செல்வோம்.

pooja-room1

பொதுவாக பூஜை செய்யும் பொழுது சில விஷயங்களை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். சுய ஒழுக்கம் மற்றும் சுய சுத்தம் என்பது கண்டிப்பாக தேவை. ஏனென்றால் சிலர் சொல்வார்கள் குளிக்க வில்லை என்றாலும் சிறிதளவு தண்ணீரை தலையில் தெளித்துக் கொண்டு பூஜைசெய்யலாம் என்று. கடவுளை நாம் வணங்குகிறோம் என்றாலே நமது உடலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அப்படி உடல் சுத்தம் இல்லாமல் நீங்கள் பூஜை அறையில் அமர்ந்தால் உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் மனதில் ஒருவித சங்கடம் தோன்றும். மண உறுத்தல் இல்லாமல் உங்களால் பூஜை செய்ய இயலாது. இவ்வாறு மணதில் சங்கடத்துடன் பூஜை செய்தல் கூடாது. பூஜை செய்வதற்கு முன்பு குளிர்ந்த நீரில் குளித்து விட்டு சென்றாள் உடலும் புத்துணர்ச்சியுடன் இருக்கும் மணமும் மிகவும் சந்தோஷத்துடன் இருக்கும்.

கோவில்களில் உள்ள விக்ரகங்களுக்கு தினமும் மூன்று வேளை அல்லது ஒரு வேளையாவது அபிஷேகம் செய்து அலங்காரம் செய்வார்கள். சிலர் வீடுகளிலும் விக்ரகங்கள் வைத்திருப்பார்கள். அவர்களும் நிச்சயமாக அபிஷேகம் செய்யவேண்டும். ஆனால் அவ்வாறு செய்ய முடியாவிட்டால் நாம் வைத்திருக்கும் பஞ்ச பாத்திர நீரில் ஏதேனும் ஒரு மலரை வைத்து நனைத்து கடவுள் பாதத்தில் 3 சொட்டு நீர் இட வேண்டும். இவ்வாறு செய்வதால் அபிஷேகம் செய்வதற்கு இணையான பலன் கிடைக்கும். நாம் நிறைய சாமி படங்கள் மற்றும் விக்ரகங்கள் வைத்திருந்தால் தனித்தனியே ஒவ்வொரு கடவுளின் பாதத்திலும் வைக்க முடியாவிட்டாலும் இவற்றிற்கு பொதுவாக ஒரே இடத்தில் மூன்று சொட்டு நீர் வைத்தால் மட்டும் போதும்.

maragatha-lingam

அடுத்ததாக சாமி படங்களுக்கு பூ போடுவதில் பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. நமது வீட்டில் நிறைய சாமி படங்கள் இருந்து அதற்கெல்லாம் முழம் முழமாக நிறைய பூக்கள் போட வேண்டுமோ என்ற எண்ணம் இருக்கிறது. வாசனை மலர் எதுவாக இருந்தாலும் அதில் ஒன்று வைத்தால் மட்டும் கூட போதுமானதாகும்.

நமது வீட்டில் விக்ரகங்கள் இருப்பின் தினமும் அதற்கு நிச்சயம் நெய்வேத்தியம் படைக்க வேண்டும். நெய்வேத்தியம் செய்வதற்கு முன் குளித்துவிட்டு பின்பு தான் செய்யவேண்டும். சிலரால் தொடர்ந்து தினமும் நைவேத்தியம் செய்ய முடியாமல் போகலாம் அதனால் தினமும் தனியாக நெய்வேதியம் செய்யாமல் நாம் சமைத்ததை இறைவனுக்கு படைக்கலாம். இதைத்தவிர உலர் திராட்சை, முந்திரி, பழங்கள் போன்றவற்றையும் நெய்வேத்தியமாக படைக்கலாம்.

naivedyam

அடுத்ததாக விளக்கு ஏற்றுவது. நிறைய பேருக்கு விளக்கு ஏற்றுவதில் தான் அதிகமாக சந்தேகம் இருக்கிறது. ஒரு விளக்கு ஏற்றுவதா இரண்டு ஏற்றுவதா அல்லது மூன்று ஏற்றுவதா என்று குழப்பமடைவதுண்டு. உங்கள் வீட்டில் எத்தனை விளக்கு இருந்தாலும் ஏற்றலாம். பூஜை அறை எப்போதும் மிகவும் வெளிச்சமாக இருக்க வேண்டும் அவ்வளவுதான். இதற்கு எந்தவித கணக்கும் கிடையாது. அதன் பிறகு வரும் சந்தேகம் விளக்கில் போடும் திரியில் தான். ஒற்றைத்திரி போடக்கூடாது இரட்டை திரி போட்டால்தான் வீட்டில் பிரச்சனை இல்லாமல் இருக்குமா என்று சிலர் யோசிப்பதுண்டு. உங்களிடம் உள்ள விளக்குத் திரியின் தடிமனை பொருத்து நீங்கள் எப்படி வேணாலும் போட்டுக் கொள்ளலாம். எந்த அளவிற்கு தடிமனாக திரி போட்டு விளக்கு ஏற்றுகிறோமோ அந்த அளவிற்கு விளக்கு நின்று அதிக நேரம் எரியும். அதுமட்டுமல்லாமல் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு நல்லெண்ணெய் மற்றும் பசு நெய் இவற்றில் ஏதேனும் ஒன்று வைத்து விளக்கு ஏற்றினால் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

nei-deepam

அடுத்ததாக தூபம் காட்டுதல். வாசனை நிறைந்த இடத்தில் மகாலட்சுமி நிறைந்திருப்பாள். சாம்பிராணி அல்லது தசாங்கம் வாங்கி பயன்படுத்தியும் தூபம் போடலாம். தசாங்கம் பயன்படுத்தினால் வீடு முழுவதும் இல்லாமல் உங்கள் தெரு முழுவதுமே கோவில் மணம் உண்டாகும். இறுதியாக ஆராதனை காட்டுவது. கற்பூர ஆராதனை காட்டும் போது வலதுபுறமாக 3 சுற்று சுற்றி வைத்து விட வேண்டும். எப்போதும் இடதுபுறமாக சுற்றக் கூடாது. பெரிய காரியங்களுக்கு மட்டுமே அவ்வாறு செய்வார்கள். அதனால் வலதுபுறமாக மூன்றுமுறை சுற்றிவிட்டு முடித்துவிடவேண்டும்.

Author: admin