வரலாற்றில்இன்று

•988 – டப்லின் நகரம் அமைக்கப்பட்டது.
•1086 – டென்மார்க் மன்னர் நான்காம் கனூட் கிளர்ச்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
•1212 – லண்டன் நகரின் பெரும் பகுதியை தீ அழித்தது.
•1460 – வாரிக் துணைநிலை மன்னர் ரிச்சார்ட் நெவில் இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னரின் படைகளை நோர்த்தாம்ப்டன் நகரில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்து மன்னரைச் சிறைப்பிடித்தார்.
•1499 – வாஸ்கோ ட காமாவுடன் பயணம் செய்து இந்தியாவுக்கான பயண வழியைக் கண்டறிந்த பின்னர் போர்த்துக்கீச நாடுகாண் பயணி நிக்கொலோ கோலியோ லிஸ்பன் திரும்பினார்.
•1553 – ஜேன் கிரே இங்கிலாந்தின் அரசியாக முடிசூடினார். இவர் 9 நாட்கள் மட்டுமே பதவியில் இருந்தார்.
•1584 – ஒல்லாந்து, டெல்ஃப்ட் நகரில் ஒரேஞ்சு மன்னர் முதலாம் வில்லியம் படுகொலை செய்யப்பட்டார்.
•1778 – அமெரிக்கப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி மன்னர் பிரித்தானியா மீது போரை அறிவித்தார்.
•1796 – ஒவ்வொரு நேர் முழு எண்ணும் அதிகபட்சம் மூன்று முக்கோண எண்களின் கூட்டுத்தொகையாகக் கொடுக்கலாம் என்பதை கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் கண்டுபிடித்தார்.
•1806 – வேலூர் சிப்பாய் எழுச்சி: தமிழ்நாட்டில் வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சியில் பல ஆங்கிலேயப் படையினர் கொல்லப்பட்டனர்.
•1869 – சுவீடனில் காவ்லி நகர் தீயில் அழிந்தது. நகரின் 80% குடிமக்கள் வீடுகளை இழந்தனர்.
•1882 – பெருவுடனான போரில் சிலி பெரும் இழப்பைச் சந்தித்தது.
•1890 – வயோமிங் ஐக்கிய அமெரிக்காவின் 44வது மாநிலமாகச் சேர்க்கப்பட்டது.
•1909 – செருமனியின் எம்டன் நாசகாரிக் கப்பல் சேவைக்கு விடப்பட்டது.
•1913 – கலிபோர்னியாவின் சாவுப் பள்ளத்தாக்கில் வெப்பநிலை 134 °ப (57 °செ) ஆகப் பதியப்பட்டது. உலகில் பதியப்பட்ட அதியுயர் வெப்பநிலை இதுவாகும்.
•1921 – வட அயர்லாந்து, பெல்பாஸ்ட் நகரில் துப்பாக்கிச் சூடு, மற்றும் வன்முறைகளில் 16 பேர் கொல்லப்பட்டன, 161 வீடுகள் சேதமடைந்தன.
•1925 – சோவியத் ஒன்றியத்தின் செய்தி நிறுவனம் டாஸ் ஆரம்பிக்கப்பட்டது.
•1925 – இந்திய ஆன்மிகத் தலைவர் மெகர் பாபா இறக்கும் வரையான (44-ஆண்டுகள்) மௌன விரதத்தை ஆரம்பித்தார். இந்நாள் அமைதி நாளாக அவரின் பக்தர்களால் நினைவுகூரப்படுகிறது.
•1938 – ஓவார்டு இயூசு 91-மணி நேரத்தில் உலகைச் சுற்றிவரும் விமானப் பயணத்தை ஆரம்பித்தார். இது புதிய உலக சாதனை ஆகும்.
•1941 – இரண்டாம் உலகப் போர்: போலந்தின் ஜெட்வாப்னி நகரில் நூற்றுக்கணக்கான யூதர்கள் நாட்சி ஜெர்மனியரினால் படுகொலை செய்யப்பட்டனர்.
•1942 – நெதர்லாந்தும் சோவியத் ஒன்றியமும் தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்டன.