“புதிய பாலிசியை ஏற்க சொல்லி பயனர்களை கட்டாயப்படுத்த மாட்டோம்” – வாட்ஸ் அப்


உலக அளவில் மிகவும் பிரபலமான மெஸேஞ்சர் சேவை அப்ளிகேஷனான வாட்ஸ் அப், தன்னுடைய தனியுரிமைக் கொள்கையில் புதிதாக சில மாற்றங்களை மேற்கொண்டு வந்துள்ளது. அதனை பயனர்கள் ஏற்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட பயனர்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த முடியாது எனவும் செய்திகள் வெளியாகின.
இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த விசாரணைக்கு வந்த நிலையில் மத்திய அரசு தகவல் பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரும் வரை புதிய தனியுரிமைக் கொள்கையை ஏற்க சொல்லி பயனர்களை கட்டாயப்படுத்த மாட்டோம் என வாட்ஸ் அப் நிறுவனம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
image
இருப்பினும் இது தொடர்பாக நோட்டிபிகேஷன் புதிய தனியுரிமைக் கொள்கையை ஏற்காத பயனர்களுக்கு டிஸ்பிளே ஆகும் என வாட்ஸ் அப் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author: sivapriya