“ஆப்கானிஸ்தானின் 85 சதவிகித பகுதி எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது” – தலிபான்கள்


ஆப்கானிஸ்தான் நாட்டின் 85 சதவிகித பகுதி தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக தலிபான் பயங்கரவாதிகள் படையினர் தெரிவித்துள்ளனர். இதனை தலிபான் படையின் ஷாஹபுதீன் திலவர் (Shahabuddin Delawar) உறுதி செய்துள்ளார்.
அமெரிக்க படையினர் சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து தங்களது தாய் நாட்டிற்கு திரும்பி செல்லும் நிலையில் இதனை தலிபான் பயங்கரவாதிகள் உறுதி செய்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உத்தரவை அடுத்த அமெரிக்க படையினர் நாடு திரும்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Author: sivapriya