தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத சுற்றுலா பயணிகளை கனடா வரவேற்காது – பிரதமர் ஜஸ்டின்

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இன்னும் சில காலத்திற்கு கனடா வரவேற்காது என அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
“கனடா வாழ் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காகவும், மக்கள் செய்த தியாகத்திற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதனால் இப்போதைக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத சுற்றுலா பயணிகளை கனடா வரவேற்காது.
அதே நேரத்தில் முழுவதும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ள சுற்றுலா பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அடுத்தடுத்த வாரங்களில் வெளியிட உள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
கனடாவில் பயணத்திற்கான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதனை தெரிவித்துள்ளார்.

Author: sivapriya