பூஜை அறையில் வைக்கும் தண்ணீர் தினம் தினம் குறைந்துகொண்டே இருந்தால் நல்லதா? கெட்டதா?

பொதுவாகவே எல்லோர் வீட்டு பூஜை அறையிலும் கட்டாயமாக பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் இருக்கும். சில பேர் வீட்டு பூஜை அறையில் செம்பினால் ஆன சொம்பு அல்லது பித்தளை சொம்பிலும் தண்ணீர் நிரப்பி வைத்திருப்பார்கள். இந்த தண்ணீர் எதற்காக பூஜை அறையில் வைக்கப்படுகின்றது. ஆன்மிக ரீதியாகப் பார்த்தால் தெய்வங்களுக்கு அருந்துவதற்காக இந்த தண்ணீரை நம் வீட்டுப் பூஜை அறையில், நாம் வைத்திருக்கின்றோம். அந்தப் பாத்திரத்தில் வைக்கும் தண்ணீர் குறைந்தால் வீட்டிற்கு நன்மையா தீமையா.

thulasi theertham

பொதுவாகவே தண்ணீரை எந்த இடத்தில் திறந்து வைத்தாலும் அது இயற்கையாக ஆவியாகத்தான் செய்யும். திறந்தபடி வைத்திருக்கக்கூடிய தண்ணீரின் அளவு படிப்படியாக குறையத்தான் செய்யும். உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்திருக்கக்கூடிய தண்ணீர் குறைவதினால் எந்த பிரச்சனை கிடையாது. மாறாக உங்கள் வீட்டு பூஜை அறையில் வைக்கக் கூடிய தண்ணீரின் அளவு குறையாமல் இருந்தால் தான் உங்களுடைய வீட்டில் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கின்றது என்பது அர்த்தம்.

பொதுவாகவே வெயில் காலம் எனும் பட்சத்தில் வீட்டில் நாம் திறந்து வைக்கக் கூடிய தண்ணீரின் அளவு வேகமாக குறையும். அதுவே, குளிர்காலமும் மழைக்காலமாக இருந்தால் தண்ணீரின் அளவு குறைய கொஞ்ச நேரம் எடுக்கும். அவ்வளவு தான். ஆன்மீக ரீதியாக நம் எல்லோர் வீட்டு பூஜை அறையிலும் தண்ணீர் வைப்பதற்கு காரணம் இறைவன் அந்த தண்ணீரை பருக வேண்டும் என்பதற்காகத்தான்.

poojai arai

ஆவியாதல் என்ற செயல்பாடும் இறைவனால் நடத்தப்படும் ஒரு விஷயமே. ஆகவே உங்கள் வீட்டு பூஜை அறையில் வைக்கும் தண்ணீரை இறைவன் பருகுகின்றாரா, அல்லது ஆவியாகித்தான் தண்ணீர் குறைந்ததா என்ற சந்தேகம் எல்லாம் உங்களுக்கு வரத் தேவையில்லை. ஆன்மீக ரீதியான நம்முடைய நம்பிக்கையை ஒருபோதும் நாம் மாற்றிக் கொள்ளக்கூடாது.

உங்களுடைய வீட்டு பூஜை அறையில் தண்ணீர் குறைந்தால், அதை உங்கள் வீட்டு தெய்வம் பருகி விட்டதாகவே மனபூர்வமாக நம்புங்கள். அந்த நம்பிக்கை உங்களுடைய வீட்டில் நேர்மறை ஆற்றலை உருவாக்கி, அந்த இறைவனை உங்கள் வீட்டு பூஜை அறையில் கொண்டு வந்து அமர்ந்தி விடும். நம்பிக்கையின் மூலமாகத்தான் நம்மால் கடவுளை உணர முடியுமே தவிர வேறு எந்த வகையிலும் கடவுள் நம் கண்ணுக்கு தெரிய மாட்டார்.

இதேபோல் உங்கள் வீட்டு பூஜை அறையில் வைக்கக் கூடிய தண்ணீரில் ஒரு ஏலக்காய், ஒரு துண்டு பச்சை கற்பூரம், சிறிது வெட்டிவேர், இரண்டு துளசி இலை, இந்த 4 பொருட்களையும் போட்டு வைக்கும்போது இதில் இருந்து வெளிவரக்கூடிய நேர்மறை ஆற்றல் உங்கள் வீட்டு பூஜை அறையை எப்போதும் கோவில் போலவே வைத்திருக்கும். உங்கள் வீட்டு பூஜை அறைக்குள் சென்று பூஜையை செய்தால் உங்களுடைய மனதை அமைதியாக வைக்க கூடிய தன்மையும் இந்த வாசத்திற்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது.

thulasi-theertham

பூஜை அறையில் வைக்கக் கூடிய இந்த தண்ணீரை அந்த தெய்வம் அருந்தும் என்ற நம்பிக்கையோடு தான் நாம் வைக்கின்றோம். தெய்வம் அருந்திய வாசனைப் பொருட்கள் கலந்த, அந்த தண்ணீர் உங்களுடைய வீட்டில் நிச்சயம் தீர்த்தமாக மாறும். இறைவனுக்கு பூஜை செய்து முடித்துவிட்டு பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரிலிருந்து நீங்களும் இரண்டு சொட்டு தாராளமாக தீர்த்தம் போலவே அருந்தலாம். ஆக தினம்தோறும் பழைய தண்ணீரை எடுத்து செடியில் அல்லது கால் படாத இடத்தில் ஊற்றிவிட்டு எச்சில் படாத சுத்தமான புதிய தண்ணீரை பூஜை அறையில் வைக்கவேண்டும். வைத்த தண்ணீர் படிப்படியாக குறைய வேண்டும் இதுவே வீட்டிற்கு நன்மை தரக்கூடிய ஒரு விஷயம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Author: admin