சனி பகவான் அருள் பெறவும், சனி தோஷம் நீங்கவும் சனிக்கிழமையில் பாட வேண்டிய சனி கவசம்! சனி தடுத்தால் எவர் கொடுப்பார்? சனி கொடுத்தால் எவர் தடுப்பார்?

நவக்கிரகங்களில் சனி பகவான் என்றாலே நமக்கு ஒரு தனி மரியாதை தான். நியாயத்திற்கும், நீதிக்கும் கட்டுப்பட்டவர் சனி பகவான். சனி பகவான் கெடுதல்களை கொடுத்தாலும் சனி கொடுக்க நினைத்தால் எவராலும் தடுக்க முடியாது என்பதால் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் திக்குமுக்காட செய்யும் அளவிற்கு நம் வாழ்க்கையே தலைகீழாக மாற்றி விடக்கூடிய சக்தியும் இவரிடம் உண்டு. நீதிமானாக விளங்கும் சனி பகவான் கொடுக்கும் இன்னல்களிலிருந்து விடுபெற சொல்ல வேண்டிய கவசம் தான் சனி கவசம்! இந்த சனி கவசத்தை மனம் உருகி பாராயணம் செய்பவர்களுக்கு சனி பாதிப்புகள் நிச்சயம் குறையும் என்பது நம்பிக்கை. இதோ உங்களுக்காக சனி கவசம் தமிழில்!

sani-temple-1

சனி கவசம்:

கருநிறக் காகம் ஏறி

காசினி தன்னைக் காக்கும்

ஒரு பெரும் கிரகமான

ஒப்பற்ற சனியே! உந்தன்

அருள் கேட்டு வணங்குகின்றேன்!

ஆதரித் தெம்மை காப்பாய்!

பொருளோடு பொன்னை அள்ளி

பூவுலகில் எமக்குத் தாராய்!

ஏழரைச் சனியாய் வந்தும்

sani-bhagavan

எட்டினில் இடம் பிடித்தும்

கோளாறு நான்கில் தந்தும்

கொண்டதோர் கண்ட கத்தில்

ஏழினில் நின்ற போதும்

இன்னல்கள் தாரா வண்ணம்

ஞாலத்தில் எம்மைக் காக்க

நம்பியே தொழுகின்றேன் நான்!

பன்னிரு ராசி கட்கும்

பாரினில் நன்மை கிட்ட

எண்ணிய எண்ணம் எல்லாம்

Sani Bagavan

ஈடேறி வழிகள் காட்ட

எண்ணெய்யில் குளிக்கும் நல்ல

ஈசனே உனைத் துதித்தேன்!

புண்ணியம் எனக்கு தந்தே

புகழ் கூட்ட வேண்டும் நீயே!

கருப்பினில் ஆடை ஏற்றாய்

காகத்தில் ஏறி நின்றாய்

இரும்பினை உலோகமாக்கி

எள் தனில் பிரியம் வைத்தாய்!

அரும்பினில் நீல வண்ணம்

sani bagavaan

அணிவித்தால் மகிழ்ச்சி கொள்வாய்

பெரும் பொருள் வழங்கும் ஈசா

பேரருள் தருக நீயே!

சனியெனும் கிழமை கொண்டாய்

சங்கடம் விலக வைப்பாய்!

அணிதிகழ் அனுஷம், பூசம்

ஆன்றோர் உத்திரட்டாதி

இனிதே உன் விண்மீனாகும்

எழில் நீலா மனைவியாவாள்!

பணியாக உனக்கு ஆண்டு

sanibagavaan

பத்தொன்போ தென்று சொல்வாய்!

குளிகனை மகனாய்ப் பெற்றாய்

குறைகளை அகல வைப்பாய்

எழிலான சூரியன் உன்

இணையற்ற தந்தை யாவார்!

விழி பார்த்து பிடித்துக் கொள்வாய்

விநாயகர் அனுமன் தன்னைத்

தொழுதாலோ விலகிச் செல்வாய்

துணையாகி அருளைத் தாராய்!

அன்ன தானத்தின் மீது

sani bagavaan

அளவிலா பிரியம் வைத்த

மன்னனே! சனியே! உன்னை

மனதாரப் போற்றுகின்றோம்!

உன்னையே சரணடைந்தோம்!

உயர்வெல்லாம் எமக்குத் தந்தே

மன்னர் போல் வாழ்வதற்கே

மணியான வழி வகுப்பாய்!

மந்தனாம் காரி நீலா

மணியான மகர வாசா!

தந்ததோர் கவசம் கேட்டே

Sani baghavan

சனி என்னும் எங்கள் ஈசா!

வந்திடும் துயரம் நீக்கு

வாழ்வினை வசந்தம் ஆக்கு!

எந்த நாள் வந்த போதும்

இனிய நாள் ஆக மாற்று!

இந்த கவசத்தை ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, சனி தசை நடப்பவர்கள் ஆகியோர் சனிக்கிழமைகளில் சனி பகவான் சன்னிதிக்குச் சென்று எள் தீபம் ஏற்றி அமைதியாக அமர்ந்து மனம் உருகி பாடலாக பாட வேண்டும். அப்படி ஒவ்வொரு சனிக்கிழமையும் நீங்கள் செய்து வர சனி பகவான் கொடுக்கும் துன்பங்கள் நீங்கி, உங்களுடைய நல்ல கர்ம வினைக்கு ஏற்ப நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு உங்களுக்கு நல்லதையும் செய்வார்.

sani-baghavan

நவகிரகங்களில் எந்த கிரகத்துக்கும் இல்லாத ஈஸ்வர பட்டம் சனீஸ்வரர் ஒருவரையே சார்ந்துள்ளது. எந்த கடவுள் வரத்தை கொடுத்தாலும் அதை மற்றவர்கள் தடுத்துவிட முடியும். ஆனால் சனி கொடுக்க எவராலும் தடுக்க முடியாது. சனிபகவானை முழுமையாக சரண் அடைந்தவர்களுக்கு வாழ்வில் துன்பங்கள் என்பதே இருக்காது. எனவே சனி கவசத்தை நம்பிக்கையுடன், பக்தியுடன் பாராயணம் செய்யுங்கள், நல்லது நடைபெறும்.

Author: admin