தீராத தரித்திரம் தீர உங்களை விட்டு கெட்டதெல்லாம் ஒழிய செய்ய வேண்டிய பரிகாரம்!

இந்த பிரபஞ்சத்தை சுற்றிலும் நல்லவை, தீயவை என்கிற இரண்டு சக்திகளும் கலந்து தான் உலவுகின்றன. அப்படி சுற்றிக் கொண்டிருக்கும் சில நேரத்தில் கெட்ட சக்திகள் நம்மையும் பீடித்துக் கொள்ளும். இதை பண்டைய காலங்களில் எல்லாம் காத்து கருப்பு அண்டி விட்டது என்று கூறுவார்கள். நன்றாக இருக்கும் சிலர் திடீரென கோபப்படுவது, ஆத்திரப்படுவது போன்ற செயல்களில் ஈடுபடும் பொழுது அவர்களை அறியாமல் அவர்களிடம் எதிர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கத் துவங்கும். இதைத்தான் தரித்திரம் என்று வேறு வகையில் கூறப்படுகிறது. இந்த தரித்திரம் நம்மை விட்டு நீங்க, நம்மிடம் இருக்கும் நல்ல விஷயங்கள் பெருகி கெட்டவைகள் ஒழிய செய்ய வேண்டிய எளிய பரிகாரம் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

amavasai

தரித்திரம் நீங்க அமாவாசை அல்லது தேய்பிறை அஷ்டமியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இந்த நாட்களில் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது நம்மிடம் இருக்கும் கெட்டவைகைகள் யாவும் விலகி செல்லும் என்பது நியதி. காலையில் அல்லது மாலையில் எந்த வேலையாக இருந்தாலும் சரி மூன்று வாழை பூக்களை எடுத்துக் கொண்டு, ஒரு சாதாரண உடையை உடுத்திக் கொண்டு, மாற்று உடையும் கையில் எடுத்துக் கொண்டு செல்லுங்கள்.

வாழை பூக்களுக்கு நம்மிடம் இருக்கும் கெட்டவைகளை ஈர்த்துக் கொள்ளும் தன்மை உண்டு. அங்கு சென்றதும் கடலில் கழுத்து அளவிற்கு இறங்கி நின்று கொள்ளுங்கள். உங்கள் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அனைத்து இடங்களிலும், நீங்கள் கொண்டு வந்த வாழைப்பூவை ஒவ்வொன்றாக எடுத்து உடம்பு முழுவதும் தடவிக் கொள்ளுங்கள்.

எல்லா இடங்களிலும் வாழைப்பூ பட வேண்டும். அதே போல மூன்றுமே செய்து விட்டு உங்கள் உடையை கழற்றி அந்த வாழைப்பூவை அதில் வைத்து சுற்றி கடலில் தூக்கி எறிந்து விடுங்கள். பின்னர் நீங்கள் கொண்டு வந்த மாற்று உடையை உடுத்திக் கொண்டு மூன்று முறை கடலில் முங்கி எழுந்து வெளியே வந்து விடுங்கள்.

இப்படி செய்யும் பொழுது நம்மிடம் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் உடையோடு உடையாக மறைந்து சென்று விடும். நம்மைப் பிடித்த பீடை, தரித்திரம் அனைத்தும் விலகி ஓடிவிடும். மறுநாள் முதல் உங்களுடைய மனம் தெளிவடைவது நீங்களே உணரலாம். இந்த எளிய பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்தால் பலன் நிச்சயம் உண்டு. பித்து பிடித்தது போல் சிலரெல்லாம் அலைவார்கள். அவர்களை இப்படி செய்ய சொன்னால் நல்ல ஒரு மாற்றம் அவர்களிடம் தெரியும்.

valaipoo

மருந்து சாப்பிட்ட உடனேயே அது வேலை செய்யாது. ஆனால் சாப்பிட்ட 5 நிமிடத்தில் நம் வலி எல்லாம் தீர்வது போல ஒரு பிரமை ஏற்படும். அதே போல தான் பரிகாரம் செய்யும் பொழுது நம் மனம் நம்மை அறியாமல் தன்னம்பிக்கை கொள்ள ஆரம்பிக்கும். ஏதோ ஒன்றை செய்து விட்டோம், இனி நமக்கு எந்த பிரச்சனையும் வராது என்கிற அந்த மனப்பான்மையை கொடுக்கக் கூடிய வல்லமை ஒவ்வொரு பரிகாரத்திற்கு உண்டு. அது தான் நம்மை வழி நடத்தி நல்ல வழிக்கு கொண்டு செல்கிறது என்பதை மனதில் கொண்டு, உங்கள் பிரச்சனை தீர முயற்சி செய்யுங்கள், நல்லதே நடக்கும்.

Author: admin