10 நாள் ஆனாலும் புதினாக்கீரை புதியதாகவே இருக்க இப்படியும் ஒரு வழி இருக்கிறதா? இவ்வளவு நாளா தெரிஞ்சுக்காம போய்ட்டோமே!

கீரை வகைகளில் பொதுவாக அதீத சத்துக்கள் இருப்பதாக அதனை அடிக்கடி உணவில் சேர்த்து வருமாறு அறிவுறுத்துகின்றனர். அதிலும் இந்த புதினாக்கீரை சற்று தனித்துவமானது. புதினா தன் நறுமணத்தில் தனித்தன்மையுடன் கீரைகளின் ராணியாக விளங்குகின்றது. அதில் இருக்கும் மருத்துவ குணங்கள் ஏராளமாக நம் கற்பனைக்கு அப்பாற்பட்டவை ஆக இருக்கின்றன. அத்தகைய அருமை, பெருமை நிறைந்த புதினாக்கீரையை நீண்ட நாட்களுக்கு நம் வீட்டில் எப்படி புத்தம் புதியதாகவே வைத்திருப்பது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

puthina

புதினா மருத்துவ குணம் நிறைந்த ஒரு கீரை வகை ஆகும். உணவு மற்றும் மருத்துவத்தில் தன் பங்களிப்பை அதிகமாக கொடுத்துக் கொண்டிருக்கும் புதினா இலைகள் அசாதாரணமான மூலிகையாக மனிதர்களுக்கு கிடைத்திருப்பது மனித குலத்திற்கு ஒரு வரம் என்றே கூறலாம். புதினா இலைகளை வாங்கி வரும் பொழுதே நல்ல ஃப்ரஷ்ஷான இலைகளாக பார்த்து வாங்கி வருவது நல்லது. அப்படி வாங்கி வரும் புதினாக்கட்டை அவிழ்க்கும் போது ஒவ்வொன்றாக எடுத்து கையில் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் லேசாக தட்டிக் கொள்ள வேண்டும். இப்படி செய்யும் பொழுது அதில் இருக்கும் சிறு சிறு வண்டுகள், பூச்சிகள் அனைத்தும் கீழே விழுந்துவிடும். அதன் பிறகு ஒவ்வொரு இலையாக கில்லி ஃபேன் காற்றில் நன்கு காய வைத்து விடுங்கள்.

தண்ணீருடன் நாம் புதினாவை சேகரிக்கும் பொழுது அது இரண்டே நாட்களில் அழுகிப் போய் விடும். புதினா இலைகளை கொஞ்ச நேரமாவது நன்கு தண்ணீர் இல்லாமல் வறண்டு விடுமாறு காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். எப்பொழுதும் புதினா இலைகளை பாலிதீன் பையில் சேகரித்து வைக்க கூடாது. நீங்கள் இப்படி பிளாஸ்டிக் பையில் சேகரித்து வைக்கும் போதும் அழுகிப் போகும் அல்லது காய்ந்து வறண்டு போய் கருத்து, நிறம் மாறி ஒன்றுக்கும் ஆகாமல் போய்விடும்.

mint-puthina-plant

புதினா கீரையை அப்படியே காம்புடன் வைத்தாலும் இதே நிலைமை தான். எனவே மேற்கூறிய படி புதினாவை தண்ணீர் இல்லாமல் கில்லி காய வைத்து அதனை ஒரு காற்று புகாத பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து வைத்து பாருங்கள்! எத்தனை நாட்கள் ஆனாலும் அது அப்படியே பிரஷ்ஷாக நிறம் மாறாமல், அதன் குணம் மாறாமல் இருக்கும். பத்து நாட்கள் வரை அப்படியே புதிதாக வாங்கியது போல புதினா கீரைகள் இருக்க இதை விட சிறந்த வழி இல்லை என்று கூறலாம்.

அடிக்கடி நம் உணவில் புதினா இலைகளை சேர்த்து வந்தால் ஜீரண பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம். பசியை தூண்டக் கூடிய புதினா இலைகள் மூலிகையாக இருப்பதால் வயிற்றுக் கோளாறுகள் அனைத்தையும் நீக்கும். ரத்தத்தை சுத்தமாக்கி நம்மை எப்போதும் புத்துணர்வுடன் இருக்கச் செய்யும். இந்த அற்புத வகை கீரையான புதினாவை ஒருபொழுதும் புறக்கணிக்காதீர்கள். புதினா காம்புகளை சாதாரணமாக மண்ணில் நட்டு வைத்தால் பத்தே நாட்களில் முளைவிட ஆரம்பிக்கும்.

mint

எனவே காசு கொடுத்து கடைகளில் வாங்குவதை விட நாம் வீட்டிலேயே எளிதாக வளர்த்து அதனை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தி வந்தால் நம்முடைய ஆரோக்கியம் மேலும் சிறக்கும். இரவு நேரங்களில் அதிகமாக சாப்பிட்டு அவதிபடுபவர்கள் புதினா இலைகளை மென்று தின்றால் போதும், வயிறு உப்புசம் நீங்கி லேசாக உணர்வீர்கள். புதினா இலைகளை சாறு எடுத்து பருகி வந்தால் மூச்சு திணறல் பிரச்சனை கூட தீர்ந்து விடும். இப்படி எண்ணற்ற வகையில் பலன்களை அள்ளிக் கொடுக்கும் புதினா இலையை அடிக்கடி பயன்படுத்துங்கள்.

Author: admin