16 வயது கிராண்ட்மாஸ்டர் நிஹல் சரின் அடுத்தடுத்து 2 சாம்பியன் பட்டங்கள் வென்று அசத்தல்


பதினாறு வயதான இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் நிஹல் சரின் வெறும் ஒன்பது நாட்கள் இடைவெளியில் தொடர்ச்சியாக இரண்டாவது சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். செர்பியாவின் பெல்கிறேட் நகரில் நடைபெற்ற செர்பியா ஓபனில் கிராண்ட் மாஸ்டர் Vladimir Fedoseev ஒன்பது சுற்றுகள் விளையாடி 7.5 புள்ளிகளை பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
அதன் மூலம் சர்வதேச அளவிலான ரேங்கிங்கில் முதல் நூறு இடங்களை பிடித்துள்ளார். தற்போது அவர் 88வது இடத்தில் உள்ளார். முன்னதாக சில்வர் லேக் ஓபனிலும் அவர் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

Author: sivapriya