அசத்தலான 6 வீட்டு குறிப்புகள். பெண்கள் இதை கட்டாயம் ட்ரை பண்ணி பாருங்க, சூப்பரான ரிசல்ட் கிடைக்கும்.

வீட்டில் பெண்கள் தான் நிறைய விஷயங்கள் செய்பவர்கள். வீட்டை கவனிப்பது மற்றும் சரியான முறைப்படி பராமரிப்பது போன்ற வேலைகளை அவர்களே பெரும்பாலும் செய்கின்றனர். அந்த வகையில் பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கக்கூடிய 6 அற்புதமான குறிப்புகளை தான் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் செல்வோம்.

kitchen

டிப்ஸ் 1:

முதலாவது குறிப்பு என்னவென்றால் பூஜை செய்வதற்கென்று சாமி படங்களுக்கு போடுவதற்காக நிறைய பூக்கள் வாங்கி வைப்போம். பூஜைக்கு போக மீதமுள்ள பூக்களை நாம் எடுத்து வைக்கும் பொழுது சில நாட்களில் அவை சீக்கிரமே அழகி வீணாகும் தருணம் ஏற்படும். பூக்கள் அழுகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்றால் ஒரு பிளாஸ்டிக் கவரிலோ அல்லது ஃப்ரிட்ஜிலோ நீங்கள் பூக்களை எடுத்து வைக்கும் முன்னர் உங்கள் வீட்டில் உள்ள ஏதேனும் ஒரு துணி அல்லது உபயோகப்படுத்தாமல் இருக்கும் பழைய கைக்குட்டையில் சுற்றி அதன் பிறகு ஒரு பிளாஸ்டிக் கவரில் எடுத்து வைத்தால் ஐந்து அல்லது ஆறு நாட்களுக்குப் பிறகும் நாம் வாங்கி வைத்துள்ள பூக்கள் நீர் கோர்க்காமல் அழுகாமல் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும்.

டிப்ஸ் 2:

நமது வீடுகளில் வாங்கி வைக்கும் வாழைப்பழங்கள் என்னதான் பச்சையாக வாங்கி வைத்தாலும் கூட இரண்டு நாட்களிலேயே கறுப்பாக மாறத் தொடங்கும். இதனை தவிர்ப்பதற்காக நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் நாம் வீணாக தூக்கி எறியும் செய்தி தாளில் வாழைப்பழத்தை வைத்து சுற்றி வைத்தால் மூன்று நாட்களுக்கு கெடாமல் நன்றாக இருக்கும். இதை தவிர உங்களிடம் அலுமினியம் ஃபாயில் இருந்தது என்றால் அதை வைத்து வாழைப்பழத்தின் காம்பு பகுதியை மட்டும் சுற்றி எடுத்து வைத்தால் 5 நாட்களுக்கும் இந்த வாழைப்பழம் கெடாமல் நன்றாக இருக்கும.

banana2

டிப்ஸ் 3:

அடுத்ததாக நாம் பார்க்கவிருப்பது நாம் சமைப்பதற்காக பயன்படுத்தும் குக்கரின் கேஸ் கேஸ்கெட் பராமரிப்பு பற்றி தான். ஏனென்றால் நாம் அதிகம் பயன்படுத்தும் குக்கரின் கேஸ்கெட் அடிக்கடி பழுதடையும். இதனை தவிர்க்க கேஸ்கெட்டை பிரிட்ஜில் பால் வைக்கும் ஒரு சிறிய அறையில் வைத்துவிட்டு குக்கரை பயன்படுத்தும் பொழுது கேஸ்கெட்டை எடுத்து பயன்படுத்தி வந்தால் கேஸ்கெட் மிகவும் இருக்கமாகவும் சமைக்கும்போது தண்ணீர் எதுவும் வெளியில் வராமலும் மற்றும் நீண்ட நாள் வீணாகாமலும் நிலைத்திருக்கும்.

டிப்ஸ் 4:

பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை நாம் வாங்கி உபயோகிக்கும் போது அதனை பிரிக்கும் போது அதன் ஓரத்தை சிறியதாக கட் செய்துவிட்டு அப்படியே உபயோகிக்க வேண்டும். அதாவது அதன் ஓரத்தை கட் செய்து சிறிய துண்டாக தனியே எடுக்கக் கூடாது. ஏனெனில் நாம் அவ்வாறு தனியாக எடுத்து குப்பையில் போடும் சிறிய துண்டினால் நிறைய பிரச்சினைகள் தோன்ற வாய்ப்புள்ளது. இவற்றை நாம் குப்பையில் தூக்கி போடும் பொழுது அவை மட்காமல் டிரெய்னேஜ் குழாய்களுக்குள் சென்று அடைப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே நாம் ஓரத்தில் மட்டும் கட் செய்து உபயோகித்து முடித்து பின்னர் அதனை குப்பையில் போட்டு விட்டோம் என்றாள் அவற்றை ரீசைக்கிள் செய்ய முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் நம்மால் முடிந்தவரை சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும்.

oil cover

டிப்ஸ் 5:

அடுத்ததாக நாம் அதிகமாக உபயோகப்படுத்தும் மிக்ஸி ஜாரின் பிளேடுகளின் ஷார்ப்னஸ் சிறிது நாட்களில் குறைய ஆரம்பிக்கும். அதை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்றால் ஒன்று அல்லது இரண்டு கையளவு கல் உப்பினை எடுத்து மிக்சி ஜாரில் சேர்த்து அதனை மூன்று அல்லது ஐந்து நிமிடங்கள் அரைத்து எடுக்க வேண்டும். இதன் மூலம் மிக்சி ஜாரில் பிளேடுகள் நன்றாக ஷார்பாகும்.

mixie1

டிப்ஸ் 6:

நாம் பாத்திரம் துலக்கும் இடமான வாஷ்பேஸினில் அடிக்கடி அடைப்புகள் ஏற்படும். இதனை தவிர்க்க நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் சிறிதளவு சோடா மாவு, சிறிதளவு வினிகர், உங்களிடம் இருந்தால் சிறிதளவு சானிடைசர், ஒரு சிறிய துண்டு கற்பூரம் இவற்றை வாஷ் பேசினில் அந்த சிறிய துளைகள் இருக்கும் இடத்தில் போட்டு விட்டு தண்ணீரை வேகமாக திறந்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அங்கு அடிக்கடி ஏற்படும் அடைப்பை தவிர்க்க முடியும்.

Author: admin