எங்கிருந்தோ பறந்து வரும் காகம் உங்கள் தலையில் கொட்டினால் என்ன அர்த்தம் தெரியுமா?

எல்லோருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒரு சமயத்தில் காகம் தலையில் கொட்டி விட்டு செல்வதை நாம் அனுபவித்திருப்போம். காகம் தலையில் கொட்டியவுடன் அபசகுணமாக கருதி உடனே நம் எண்ண ஓட்டங்கள் ஜாதகத்தில் ஏதோ நிகழ இருப்பதாக கருதி விடுகிறது. காகம் தலையில் கொட்டுவதை குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. அதில் முக்கியமாக சனி பகவானின் வாகனமாக காகம் இருப்பதால் நமக்கு கிரக தோஷங்கள் ஏற்படப் போவதாக அல்லது கிரக தோஷங்கள் நீங்குவதாக நாம் கருதி விடுவதும் உண்டு. காகம் தலையில் கொட்டுவதற்கும் கிரக தோஷத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே சாஸ்திர ரீதியாக உண்மை.

sani-bagawan

உண்மையில் காகம் தலையில் கொத்தி விட்டு போவது, அதன் இறக்கை பட்டுவிட்டு போவது போன்றவை எதார்த்தமாக நிகழக் கூடியவையும் அல்ல. அனைத்தையுமே அவ்வாறு சாதாரணமாக எடுத்து கொண்டு விட முடியாது அல்லவா? கடவுள் நமக்கு எதையோ உணர்த்த தான் இவ்வாறு செயல்பட வைக்கிறார். ஒருவரது வாழ்க்கையில் அவர் செய்த புண்ணியம் அவரை காப்பாற்றும் என்று கூறப்படுகிறது. சில சமயங்களில் நமக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படவிருப்பதை முன்கூட்டியே நமக்கு சில அறிகுறிகள் மூலம் தெரிந்து விடும். அது போன்ற ஒரு அறிகுறி தான் காகம் தலையில் கொட்டி விட்டு செல்வதும்.

Sani bagavan

ஓரமாக அது பாட்டுக்கு சென்று கொண்டிருக்கும் மாடு திடீரென முட்ட வருவது, எங்கும் எந்த கூடும் காட்டாத நிலையில் கூட காகம் தலையில் கொட்டுவது, யாருக்காவது திருமணம் நடைபெறுவது போன்ற கனவு வருவது, கெட்ட கனவுகளால் பயந்து எழுவது இது போன்ற சில அறிகுறிகள் நமக்கு ஒரு சில மாதங்களில் ஏதோ ஒரு பெரிய ஆபத்து வருவதை உணர்த்தும் அறிகுறிகளாக இருக்கும். அது போல தான் காகம் தலையில் கொட்டினால் விபத்து நேர இருப்பதை குறிப்பதாக அர்த்தம். இதை அசுப சகுணமாக பார்க்காமல் ஆபத்திலிருந்து காப்பதற்குரிய சமிங்ஜையாக எடுத்து கொள்வது தான் நல்லது. இதனால் சிறிய அளவிளான விபத்தோ, பெரிய விபத்தோ நீங்கள் சந்திக்க நேரலாம். எனவே முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. வருமுன் காப்பதே புத்திசாலித்தனம். வாகனத்தில் செல்லும்போது மிகவும் கவனமாக இருப்பது பெரிய பிரச்சனைகளில் இருந்து நம்மை காப்பாற்றும். நமக்கு மட்டுமில்லாமல் நம்மை சார்ந்தவர்களையும் எச்சரிக்கை செய்து விடுவது நல்லது.

crow-touch

இதேபோல நம் முன்னோர்கள் காகம் ரூபத்தில் வருவதாக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. நம்முடைய பித்ருக்களுக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகளை சரிவர நிறைவேற்றாமல் இருப்பதால் அவர்கள் மன வேதனையில் இருக்கலாம். அதனை உணர்த்துவதற்கு காகம் தலையில் கொட்டிவிட்டு செல்லலாம். அவர்களை முறையாக வழிபடுவதால் நம்முடைய இக்கட்டான எல்லா சூழ்நிலையிலும் நல்லதே நடக்கச் செய்வார்கள். காலம் காலமாக தொடர்ந்து இதை பற்றி வலியுறுத்தி வந்தாலும் சிலருக்கு நம்பிக்கை இருப்பதில்லை. எது நடந்தாலும் நன்மையாக நடக்க கூடியதை கூடுமானவரை செய்து விட வேண்டியது அவசியம். இவை நம்மை மட்டுமல்ல நம் வம்சத்திற்கே சிறந்த பலன்களை தேடித் தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாழ்வில் எந்த கடனை தீர்ப்பீர்களோ இல்லையோ, பித்ரு கடன்களை தீர்த்து விட வேண்டியது அவசியமான ஒன்று. இவை நமக்கு பல நன்மைகளை பெற்றுத்தரும் என்பதில் சந்தேகமில்லை.

Author: admin