கலியுகம் 5000 ஆண்டுகளுக்கு பிறகு எப்படி இருக்கும்? என்று தெரிந்து கொள்ள ஆர்வமா? கோரக்க சித்தர் கூறிய அற்புத அதிர வைக்கும் தகவல்கள்!

கலியுகம் நடக்கும் பொழுது எப்படி இருக்கும்? என்று பலரும் கூற நாம் பல இடங்களில் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். கலியுகம் முடியும் பொழுது உலகத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு மடிவது உறுதி என்று பல மேற்கோள்கள் மூலம் பல சித்தர்கள் கூறியுள்ளனர். உண்மைக்கும், நேர்மைக்கும் புறம்பான ஆட்சி நடக்கும் என்றும், மக்கள் ஒருவரை ஒருவர் அடித்து சாப்பிடும் நிலை வரும் என்றும் கூறப்படுகிறது. அப்படியிருக்க கலியுகம் முடிந்து 5000 ஆண்டுகளுக்கு பிறகு எப்படி இருக்கும்? என்று கோரக்கர் அன்றே கூறி சென்றுள்ளார் என்பது வியப்பிற்குரிய ஒன்றாகும். அதைப் பற்றிய சுவாரசிய தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

earth-moon1

கலியுகம் முடியும் தருவாயில் உலகம் எப்படி இருக்கும்? என்பதை வைத்து கலியுகம் முடிய போகிறது என்று நாம் உணர்ந்து கொள்ள முடியும். ஜாதி, மத பேதங்கள், நிற பேதங்கள் அதிகரிக்கும். பெண் பிள்ளைகளே அதிகம் பிறப்பார்கள். ஆண்கள் குறைவாக பிறப்பதால் பெண்ணாசை அதிகரித்து முறைகெட்ட திருமணங்கள் நடைபெறும். நூற்றுக்கு ஒருவரே நல்லவர்களாக பிறப்பார்கள். கொடுமைகளும், துன்பங்களும் அதிகரிக்கும். மனிதர்களுடைய உயரம் குறைந்து அவர்கள் குட்டையாக தோற்றமளிப்பார்கள். இப்போது இருக்கும் ஆயுளை விட, அப்போது மனிதர்களின் ஆயுள் மிக மிக குறைந்து காணப்படும். இளம் வயதிலேயே மரணம் ஏற்படும்.

உலகத்தில் பஞ்சமும், துன்பமும் அதிகரிக்கும். ஆகாயத்தில் வித்தியாசமான தோற்றங்கள் உருவாகும். வால் நட்சத்திரம் ஒன்று தோன்றி வெட்டவெளியில் பிரகாசமாக தெரியும். அதிலிருந்து எழும் ஒளியானது சந்திரன் மேல் சென்று நிற்கும். சூரியனுடைய கதிர்வீச்சு அதிகரித்து வெப்பம் காரணமாக புதிது புதிதாக நோய்கள் உண்டாகி மனிதர்கள் கொத்துக் கொத்தாக மாண்டு மடிவார்கள். பகல் பொழுதில் வெப்பம் அதிகரித்தும், இரவு நேரத்தில் பனி அதிகரித்தும் நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள் எல்லாம் நடக்கப் போகிறது.

சந்திரன் மேல் அரூபங்களாக சிலவை தெரியும். இரவு பொழுது அதிகரித்து, பகல் பொழுது குறையும். வடக்கு திசைகளில் ஆழிப் பேரலை உருவாகும். நெருப்பு மழை கொட்டி நாடே நாசமாகும் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது. இது எல்லாம் நடந்து முடிந்து ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் மக்களுடைய மனதில் நல்ல எண்ணங்கள் உண்டாகி, ஜாதி பேதம் எல்லாமே முடியும். மனித குலம் எல்லாம் ஒன்று என்கிற ஒற்றுமை உண்டாகும். சந்திரன் பௌர்ணமி, அமாவாசை என்று மாறி மாறி தெரியாமல் முழு நிலவாக தன் ஒளியை வெளியிடும்.

பகல் பொழுது அதிகரித்து இரவு நேரம் குறையும். பொய்யைக் கூட உண்மையாக்கும் அகங்காரம் கொண்ட மனிதர்களின் அட்டகாசம் ஒழியும். தர்மத்தின் வழியே மக்கள் நடக்க ஆரம்பிப்பார்கள். சித்தர்களும், ஞானிகளும் அதிகரிப்பார்கள். இவ்வுலகில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு துணையாக நிற்பார்கள். தானதர்மங்கள் சிறப்பாக நடைபெறும். ஆன்மீகமும், விஞ்ஞானமும் செழிப்புற்று தரணி எங்கும் ஓங்கி காணப்படும். பல வண்ண நிறங்களில் மனிதர்கள் தோற்றமளிப்பார்கள்.

krishna

நல்லாட்சி 82 ஆயிரம் ஆண்டுகள் வரை நடைபெறும். நவரத்தினங்கள் எல்லாம் விளை நிலங்களில் விளைந்து செல்வம் பெருகும். மக்கள் அனைவரும் பணக்காரர்களாக வாழ்வார்கள். பறவை இனம் போல மனிதர்களும் விண்ணை நோக்கி பறப்பார்கள். நீண்ட ஆயுளுடன் ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக இருப்பார்கள். இதையெல்லாம் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. சித்தர்கள் கூறிய எதுவும் இன்று வரை பொய்த்ததில்லை. இதுவும் நடக்கும் என்றே நம்புவோம்.

Author: admin