25 மூலிகைகளை கொண்ட அற்புதமான எண்ணெயை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி? 5 வகையான தலை முடி பிரச்சனைகளுக்கு இது அற்புதமான தீர்வாக அமையும்.

இப்போது இருக்கும் காலகட்டத்தில் சுற்றுச்சூழல் காரணமாக தலைமுடி பிரச்சனை இல்லாதவர்கள் என்று எவரும் இல்லை. இளநரைக்கு ஒரு எண்ணெய், பொடுகு தொல்லைக்கு ஒரு எண்ணெய், முடி அடர்த்திக்கு ஒரு எண்ணெய், முடி கருமையாவதறக்கு ஒரு எண்ணெய், முடி கொட்டுவதை தவிர்ப்பதற்க்கு ஒரு எண்ணெய் என்று எவ்வளவுதான் விலை உயர்ந்த எண்ணெய்களை வாங்கி பயன்படுத்தினாலும் அதற்கான பலன்கள் எதுவும் கிடைப்பதில்லை. தலைமுடியின் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே ஒரு எண்ணெய் போதுமானது என்பதே உண்மை. அப்படிப்பட்ட அற்புத எண்ணெயை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் வாருங்கள்.

hair

தேவையான உலர் மூலிகை பொருட்கள்:

ஆவாரம் பூ (50 – கிராம்), பாதாம் 10, கடுகு (50 – கிராம்), வெந்தயம் (50 – கிராம்), மிளகு (50 – கிராம்), கிராம்பு (50 – கிராம்), ஆலிவ் விதை (50 – கிராம்), கருஞ்சீரகம் (50 – கிராம்), ஓமம் (50 – கிராம்), பட்டை (10 – கிராம்), நீல அவுரி (50 – கிராம்), வெட்டிவேர் (50 – கிராம்)

தேவையான பச்சை மூலிகைகள்:

வேப்பிலை (ஒரு கைப்பிடி), மருதாணி (ஒரு கைப்பிடி), கற்புறவல்லி (ஒரு கைப்பிடி), வெள்ளை கரிசலாங்கண்ணி (ஒரு கைப்பிடி), துளசி (ஒரு கைப்பிடி), செம்பருத்தி (ஒரு கைப்பிடி), கருவேப்பிலை (ஒரு கைப்பிடி), வெற்றிலை (ஒரு கைப்பிடி), அருகம்புல் (ஒரு கைப்பிடி), நெல்லிக்காய் 5, ரோஜா இதழ்கள் (ஒரு கைப்பிடி), செம்பருத்திப்பூ 7, பூண்டு 10, சின்ன வெங்காயம் 10, எலுமிச்சைபழம் 3, கற்றாழை 2 பெரிய துண்டு.

vepilai

தேவையான எண்ணெய் வகைகள்:

தேங்காய் எண்ணெய் – 1/2 லிட்டர்

நல்லெண்ணெய் – கால் லிட்டர்

விளக்கெண்ணெய் – 100 கிராம்

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள உலர்ந்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக ஒரு மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதை கலந்து ஒரு துணியில் மூட்டையாகக் கட்டி அதனை ஒரு இரும்பு கடாயில் தண்ணீர் ஊற்றி அதில் மூழ்குமாறு வைத்து கொதிக்க விட வேண்டும். மூலிகையின் சாறு முழுவதுமாக இறங்கும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

mixi

பிறகு நாம் பச்சையாக எடுத்து வைத்துள்ள மூலிகைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக மிக்ஸியில் சேர்த்து அரைத்து அவற்றை வடிகட்டி சாரை மட்டும் தனியாக பிரித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அந்த சாரை ஒரு இரும்பு கடாய் வைத்து நன்றாக சுண்டி வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு பெரிய பாத்திரத்தில் அரை லிட்டர் தேங்காய் எண்ணெய், கால் லிட்டர் நல்லெண்ணெய், 100 கிராம் விளக்கெண்ணெய் சேர்த்து அதனுடன் நாம் கொதிக்க வைத்து எடுத்து வைத்துள்ள இரண்டு மூலிகை சாறுகளையும் இதனுடன் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து பின்னர் அடுப்பை அனைத்து இந்த எண்ணெய் நன்றாக ஆறியதும் வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து தேய்த்து வரலாம். மூலிகை வாசம் நன்றாக வீசும். மூலிகை வாசம் விரும்பாதவர்கள் பச்சை கற்பூரம் அல்லது ஏதேனும் வாசனை திரவியங்களை சேர்த்துக்கொள்ளலாம்.

Mooligai ennai

நாம் இந்த எண்ணெய் தயாரிப்பில் பயன்படுத்திய பொருட்களின் பயன்கள்:

வேப்பிலை – பொடுகு வராமல் பாதுகாக்கிறது, மருதாணி – நமது ஸ்கேல்ப்பிற்கு குளிர்ச்சியை தருகிறது, கற்புறவல்லி – இளநரை மற்றும் பொடுகு தொல்லையில் இருந்து நிவாரணம், வெள்ளை கரிசலாங்கண்ணி – இளநரையை அகற்றி முடியை கருமையாக்குகிறது மற்றும் முடி வளர்ச்சியையும் தூண்டுகிறது, துளசி – நமது ஸ்கால்ப்பிற்கு குளிர்ச்சி தருகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, செம்பருத்தி இலை – இளநரை மற்றும் பொடுகு வராமல் தவிர்க்கிறது, கருவேப்பிலை – கருவேப்பிலையில் உள்ள பீட்டா கரோட்டின் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது, வெற்றிலை – முடி கொட்டுவதை தவிர்க்கிறது, அருகம்புல் – ஸ்கால்ப்பில் உள்ள இறந்த செல்களை அகற்றி முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.

Arugampul juice benfits Tamil

நெல்லிக்காய் – நெல்லிக்காயில் உள்ள கொலாஜன் புரோட்டின் முடி நீளமாக வளர உதவுகிறது, ஆவாரம் பூ – தலையில் அலர்ஜி எதுவும் வராமல் பாதுகாக்கிறது, ரோஜா இதழ்கள் – முடி அடர்த்தியாக வளர உதவுகிறது மற்றும் கண்டிஷனராக பயன்படுகிறது, செம்பருத்திப்பூ – முடி வெடிப்பு வராமல் பாதுகாக்கிறது, பூண்டு – பூண்டில் உள்ள கொலாஜன் மற்றும் விட்டமின் சி முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது, சின்ன வெங்காயம் – வழுக்கை தலையிலும் முடி வளர உதவுகிறது, பாதாம் – பாதாமில் உள்ள விட்டமின்கள் ஒமேகா 6 முடி வளர்ச்சிக்கு உதவுகிறது, கடுகு – பொடுகு வராமல் பாதுகாக்கிறது, வெந்தயம் – உடலுக்கு குளிர்ச்சி அளிக்கிறது, மிளகு – மிளகில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி முடி வளர்ச்சிக்கு துணை புரிகிறது, கிராம்பு – பொடுகினால் வரும் அரிப்பை தவிர்க்கிறது.

ஆலிவ் விதை – ஆலிவ் விதையில் உள்ள ஒமேகா 3 முடி வளர உதவுகிறது, கருஞ்சீரகம் – வழுக்கை தலையில் முடி வளர உதவுகிறது, ஓமம் – இளநரை வராமல் தடுக்கிறது, பட்டை – இரத்த ஓட்டத்தை அதிகரித்து மற்றும் முடி வளர்ச்சியை தூண்டுகிறது, நீல அவுரி – இயற்கையாக முடியை கருமையாக வைக்கிறது, வெட்டிவேர் – தலையையும் முடிவையும் குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது, எலுமிச்சைபழம் – விட்டமின் சி முடி வளர்ச்சிக்கு உதவுகிறது, கற்றாழை – முடி மிருதுவாக இருக்க உதவுகிறது, தேங்காய் எண்ணெய் – தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் ஆசிட் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது, நல்லெண்ணெய் – ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, விளக்கெண்ணெய் – தலையில் தொற்று உருவாகாமல் தவிர்க்கிறது அதோடு முடி வெடிப்பையும் குறைகிறது.

இந்த மூலிகை எண்ணெய் மட்டும் பயன்படுத்தி பாருங்கள் உங்கள் தலை முடியில் வரும் எந்தவித பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும்.

Author: admin