உங்கள் வீட்டில் தங்கம் குறையாமல் சேர்ந்து கொண்டே இருக்க இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு சென்று தங்கம் வாங்குங்கள்.

மகாலட்சுமியின் அம்சமான ஸ்வர்ணம் நம் வீட்டில் எந்தவித குறைபாடும் இல்லாமல் சேர்ந்துகொண்டே இருக்கவேண்டும் என்பதுதான் பலபேரின் கனவாக இருந்து வருகிறது. அந்தக் கனவை நினைவாக்கி, தங்க நகைகளையோ, தங்க நாணயங்களையோ நம் வீட்டில் சேர்ப்பதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் நம்மில் பலர் இன்றளவும் தவித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எத்தனையோ கஷ்டங்களை தாண்டி குண்டுமணி அளவு தங்கத்தை வீட்டில் வாங்கி வைத்தாலும், அது நிரந்தரமாக நம் வீட்டிலேயே இருக்குமா என்பதும் சந்தேகம்தான். நீங்கள் வாங்கும் தங்கமானது உங்களிடமே நிரந்தரமாக இருக்கவும், மேலும் மேலும் நீங்கள் தங்கம் வாங்கும் சூழ்நிலை ஏற்படவும் ஒரு வழி உள்ளது. அந்த வழி என்ன என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

gold-rate

நாம் உழைத்து கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் வாங்கும் தங்கமானது நிரந்தரமாக நம்மிடமே இருக்க வேண்டும் என்றும், மகாலட்சுமியின் அருள் கொண்டு மீண்டும் மீண்டும் தங்கத்தை வாங்க வேண்டும் என்றும் மனதார நினைத்துக்கொண்டு, தங்கம் வாங்க செல்வதற்கு முன்பு முதலில் அந்த ஸ்வர்ண கணபதியை மனதில் நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை உச்சரியுங்கள். உங்களுக்கான ஸ்வர்ண கணபதி மந்திரம் இதோ.

ஓம் ஸ்வர்ண கணபதியே வஸ்ய வஸ்ய நம

vinayagar

நீங்கள் தங்கம் வாங்க செல்வதற்கான உகந்த நாளாக சாஸ்திரத்தில் புதன்கிழமை கூறப்பட்டுள்ளது. புதன்கிழமையோடு சேர்த்து அன்றைய தினம் நல்ல தினமா, என்பதையும் உங்கள் தினசரி நாள்காட்டியில் பார்த்துக்கொள்ளுங்கள். நாள்காட்டியில் குறிப்பிட்டுள்ள நல்ல நேரத்தில் கடைக்குச் சென்று தங்க நகையை வாங்குவது என்பது சிறந்தது. தங்க நகையை வாங்க செல்வதற்கு முன்பு உங்களது வீட்டில் பூஜை அறையில் ஒரு விளக்கினை ஏற்றி வைத்து, ஒரு நிமிடம் ஸ்வர்ண விநாயகரையும், மகாலட்சுமியையும் மனதார நினைத்து இந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்துவிட்டு பின்பு நீங்கள் வாங்கப்படும் தங்கமானது காலாகாலத்திற்கும் உங்கள் கையில் நிலைத்திருக்கும். மேலும் மேலும் தங்கத்தை வாங்குவதற்கான வாய்ப்பையும் உங்களுக்கு தரும். இந்த மந்திரத்தை உச்சரிப்பதுடன் தங்கத்தை மேலும்மேலும் வாங்குவதற்கான உங்களது சேமிப்பையும் அன்று முதல் தொடங்குவது நல்லது.

Author: admin