அரிதினும் அரிதான கண்ணாடி ஆக்டோபஸ் பசிபிக் பெருங்கடலில் படம் பிடிக்கப்பட்டது..!

அரிதினும் அரிதாகக் காணப்படும் கண்ணாடி ஆக்டோபஸ் தற்போது பசிபிக் பெருங்கடலில் பார்க்கப்பட்டுள்ளது.
கடந்த 1918ம் ஆண்டில் கண்ணாடி ஆக்டோபஸ் முதன் முதலில் பார்க்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளனன. கடலுக்குள் மிக அதிக ஆழத்தில் மட்டுமே இந்த ஆக்டோபஸ்கள் காணப்படுவதால் பெரும்பாலும் ஆய்வாளர்களின் கண்ணுக்குப் புலப்படுவதில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன் பசிபிக் கடலின் ஃபீனிக்ஸ் தீவு பகுதியில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தபோது இந்த ஆக்டோபஸ் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
சாதாரண கண்களால் பார்க்கும் போதே அதன் உள்ளுறுப்புகள் தெரியும் வண்ணம் இருக்கும். அதனருகில் யாராவது சென்றால் தனது தோல் மேல் இருக்கும் ஒளிரும் பச்சை வண்ணப் புள்ளிகளைக் காட்டி பயமுறுத்துகிறது.
Author: admin