லக்னோவில் தீவிரவாதச் செயல்களை நடத்த இருந்த சதித்திட்டம் முறியடிப்பு – 2 தீவிரவாதிகள் கைது

லக்னோவில் தீவிரவாதச் செயல்களை நடத்தும் சதித்திட்டத்துடன் நடமாடிய இரண்டு தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களுக்கு அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும், எல்லைக்கு அருகில் உள்ள சில தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகவும் தீவிரவாதத் தடுப்புப் போலீசார் தெரிவித்தனர்.
அவர்களிடமிருந்து ஏராளமான வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து அவர்களை சுற்றி வளைத்த தீவிரவாதத் தடுப்புப் பிரிவினர் , வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் கைப்பற்றிய வெடிகுண்டுகளை பத்திரமாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
Author: admin