உங்களின் நேரடி, மறைமுக எதிரிகளிடமிருந்து உங்களை தற்காத்துக்கொள்ள சுலபமான சூலினி மந்திரம்.

போட்டிகள் நிறைந்த இந்த காலகட்டத்தில் எதிரிகள் இல்லாமல் வாழ்வது என்பது மிகவும் கஷ்டம். சில எதிரிகள் நம் கண்களுக்கு தெரிந்தவர்களாக இருக்கலாம். சில எதிரிகள் நம் கண்களுக்கு புலப்படாதவர்களாகவும் இருக்கலாம். இப்படிப்பட்ட எதிரிகளிடமிருந்து நம்மை காத்துக்கொள்ள என்னதான் வழி? உங்களின் வெற்றியை பார்த்து பொறாமை கொண்டு உங்களுக்கு எதிராக செயல்படும் எதிரிகளிடம் இருந்து உங்களை காத்துக் கொள்ள சுலபமான ஒரு வழியை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

kali soolini1

இதில் முதல் வழியாக தினம் தோறும் நாம் பின்பற்ற வேண்டிய ஒரு காரியம் என்னவென்றால் நெற்றியில் குங்குமம் வைத்துக்கொள்வதுதான். ஹரித்ரா குங்குமம் என்று கூறப்படும் சுத்தமான மஞ்சளினால் தயாரிக்கப்பட்ட குங்குமத்தை நம் இரு புருவங்களுக்கு இடையில் வைத்துக் கொள்வது என்பது மிகவும் சிறந்த வழி. ஏனென்றால் ஒரு கெட்ட சக்தியோ, அல்லது மற்றவர்களின் வயிற்றெரிச்சலோ, பொறாமையோ நம்மை வந்து முதலில் தாக்கும் இடம் என்பது, இரு புருவங்களுக்கு மத்தியில் இருக்கும் இடமாக தான் இருக்கும். அந்த நெற்றிப்பொட்டில் குங்குமத்தை நாம் இட்டுக் கொண்டோமேயானால் அந்த கெட்ட சக்தியானது நம்மை தாக்காமல் நம்மை விட்டு விலகிவிடும்.

இப்படி குங்குமப் பொட்டை நம் நெற்றியில் வைத்துக் கொள்ளும் சமயத்தில் ஒரு மந்திரத்தை உச்சரிக்கும்போது அந்த குங்குமத்தின் பலமானது இன்னும் அதிகரிக்கப்படுகிறது. உங்களை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ளும் ஒரு சுலபமான மந்திரம் இதோ.

kali soolini2

‘ஓம் சூலினியே நமஹ’

உங்களின் மோதிர விரலால் குங்குமத்தை எடுத்துக்கொண்டு நெற்றியில் வைக்கும் போது ஓம் சூலினியே நமஹ என்ற மந்திரத்தை 11 முறை உச்சரிக்க வேண்டும். தினம்தோறும் காலை வேளையில் குளித்து முடித்துவிட்டு நீங்கள் குங்குமப்பொட்டு வைத்து கொள்ளும் சமயத்தில் ஆண்கள் பெண்கள் இருபாலரும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். இப்படி நீங்கள் தொடர்ந்து செய்து வரும்போது அந்த மகிஷாசுரமர்த்தினி உங்களை எதிரிகளிடமிருந்தும், எதிரிகளின் கண் பார்வையில் இருந்தும், வசியத்தில் இருந்தும், கெட்ட சக்திகளிடம் இருந்தும் பாதுகாப்பாள். எப்படிப்பட்ட பெரிய எதிரியாக இருந்தாலும் சரி, உங்கள் கண்களுக்கு தெரியும் மனித ரூபத்தில் இருக்கும் எதிரிகளாக இருந்தாலும், கண்களுக்குப் புலப்படாத சூனியம் போன்ற பிரச்சனைகளாக இருந்தாலும் அவைகளிடமிருந்து உங்களை காப்பாள். ஆனால் நல்லவர்கள், நல்லதை மட்டுமே நினைத்து உச்சரிக்கப்பட வேண்டிய மந்திரம் இது. எந்தவிதமான கெட்ட செயலுக்கும் பிரயோகிக்க முடியாது.

Author: admin