இன்று பிற்பகல் 3 மணிக்குத் தொடங்குகிறது – பூரி ஜகன்னாதர் ரத யாத்திரை

பூரி ஜகன்னாதர் ரத யாத்திரை இரண்டாவது ஆண்டாக பக்தர்கள் இல்லாமல் இன்று பிற்பகல் 3 மணிக்குத் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கி இரண்டு நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் பக்தர்கள் தங்கள் வீடுகளின் ஜன்னல், பால்கனி, மொட்டை மாடிகளின் வழியாக ரத யாத்திரையைப் பார்க்க அனுமதிக்கப்பட்ட போது பெரும் கூட்டமாகத் திரண்டனர். இந்த ஆண்டு உறவினர்கள் நண்பர்களை அழைக்க அனுமதிக்கப்படவில்லை.
கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் பாதுகாப்புக்காகவும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் அதிகளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ரதயாத்திரையில் பங்கேற்க அண்டை மாநிலங்களில் இருந்து வந்தவர்களையும் போலீசார் வெளியேற்றினர்.
Author: admin