திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதத்துக்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் 20 ஆம் தேதி வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதத்துக்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் வரும் 20 ஆம் தேதி இணையத்தில் வெளியிடப்படுமென தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் தரிசனம் செய்வதற்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை வரும் 20ம் தேதி காலை 9 மணி முதல் https://tirupatibalaji.ap.gov.in/index.html#/login என்ற இணையத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Author: admin