உடை மாற்ற போவதாக அண்ணனை வெளியேற்றிய 12 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்!!

சென்னையில் 12 வயது சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆதம்பாக்கம் மோகனூர் பகுதியில் வசித்து வருபவர் வெங்கம்மா. கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது கணவருடன் ஏற்பட்ட தகராறினால் மகன் மற்றும் 6ம் வகுப்பு படிக்கும் மகளுடன் தனியாக வசித்து வருகின்றார்.

வெங்கம்மா வேலைக்கு சென்ற நிலையில் ஜெயந்தியும் அவரது அண்ணனும் மட்டும் தனியே வீட்டில் இருந்துள்ளனர். அப்போது உடை மாற்றவேண்டும் என்பதற்காக அண்ணனை வெளியே போக கூறிவிட்டு, சிறுமி ஜெயந்தி மின்விசிறியில் தற்கொலை செய்துள்ளார்.

வெகுநேரம் ஆகியும் தங்கை வெளியே வராததால் பதற்றமடைந்த சிறுவன், அக்கம்பக்கத்தினரிடம் கூறி கதவை உடைத்துள்ளனர். அப்போது சிறுமியின் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ந்துள்ளனர்.

பின்பு சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து சிறுமியின் உடல் சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பொலிசாரின் விசாரணையில், சிறுமி இரண்டு மாதங்களுக்கு முன்பு பூப்படைந்ததாகவும், மாதவிடாய் வலி தாங்கமுடியாமல் இவ்வாறான முடிவினை எடுத்திருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

Author: admin