சென்னை: அமமுக பிரமுகரின் கார் மீது பெட்ரோல் குண்டுவீச்சு

சென்னை மடிப்பாக்கத்தில் அமமுக பிரமுகரின் கார் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மடிப்பாக்கம் ராஜராஜேஸ்வரி நகரில் வசித்துவரும் ஜெய்முருகன், அமமுகவில் தென்சென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகியாக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரின் கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் வெடிகுண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துவரும் காவல்துறையினர், குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

Author: sivapriya