திருப்பதி கோயில்: தரிசனத்திற்கான முன்பதிவு ஜூலை-20 இல் தொடக்கம்

திருப்பதி கோயிலில் அடுத்த மாதம் சுவாமி தரிசனம் செய்ய ஜூலை 20-ஆம் தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவு தொடங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட உள்ளது. 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுக்களை வருகிற 20ஆம் தேதி காலை 9மணி முதல் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. tirupatibalaji.ap.gov.in என்ற தேவஸ்தான இணையதள முகவரியில் பக்தர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

Author: sivapriya