உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் கோவாக்சினுக்கு விரைவில் கிடைக்க வாய்ப்பு?

உலக சுகாதார அமைப்பிடம் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்துவிட்டதால் கோவாக்சினுக்கு உரிய அங்கீகாரம் விரைவில் கிடைக்கும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் கண்டுபிடிப்பான கொரோனா தடுப்பூசி கோவாக்சின் தொடர்பான மூன்றாம் கட்டப் பரிசோதனைகளை நிறைவு செய்துள்ள பாரத் பயோடெக் நிறுவனம் அண்மையில் அதன் விவரங்களை வெளியிட்டுள்ளது.
கோவாக்சினுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்தால், கோவாக்சின் தடுப்பூசி போட்டு வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு தடையற்ற நிலை ஏற்படும்.
தீவிர கோவிட் பாதிப்பிலிருந்து 93 சதம் பலன் தருவதாகவும் அறிகுறியற்ற பாதிப்பில் 63 சதவீதம் பலன் தருவதாகவும் டெல்டா வைரசுக்கு எதிராக 65 சதவீதம் பலன்தருவதாகவும் கோவாக்சின் பரிசோதனை முடிவுகள் தெரிவித்துள்ளன.
Author: admin