‘யூனிட்டி 22’ பயணம் வெற்றி: சிரிஷா பாண்ட்லாவை தோளில் சுமந்து கொண்டாடிய ரிச்சர்ட் பிரான்சன்


‘யூனிட்டி 22’ விண்கலம் வெற்றிகரமாக தனது முதல் பயணத்தை நிறைவு செய்து கொண்டு பூமிக்கு லேண்டாகி உள்ளது. 70 வயதான பிரிட்டனை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன் நிறுவிய விண்வெளி சுற்றுலா நிறுவனமான விர்ஜின் கேலடிக்கின் இந்த விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது.
இந்த விண்கலத்தில் ரிச்சர்ட் பிரான்சன் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிரிஷா பாண்ட்லா உட்பட ஆறு பேர் இந்த பயணத்தை மேற்கொண்டனர். அதிகபட்சமாக 85 கிலோ மீட்டர் உயரத்தை எட்டியது இந்த யூனிட்டி விண்கலம்.
இந்நிலையில் இந்த விண்கலம் பூமிக்கு திரும்பியதும் உற்சாக மிகுதியில் சக பயணி சிரிஷா பாண்ட்லாவை தோளில் சுமந்து கொண்டு கொண்டாடியுள்ளார் ரிச்சர்ட் பிரான்சன்.“முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள யூனிட்டி-22வின் சிறப்புமிக்க குழுவில் நானும் உள்ளேன் என்பதை எண்ணி பெருமை கொள்கிறேன். எல்லோருக்கும் விண்வெளி பயணத்தை சாத்தியமாகும் விர்ஜின் கேலடிக்கின் நிறுவனத்தில் ஒரு பகுதியாக இருப்பதிலும் மகிழ்ச்சி” என சிரிஷா பாண்ட்லா தெரிவித்துள்ளார்.

Author: sivapriya