பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விருப்பம்

பிரபல ஹாலிவுட் நடிகரான ஜாக்கிசான் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேருவதற்கு முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பான தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர், பல நாடுகளுக்கு தாம் சென்ற போது சீனா அனைத்து வகையிலும் குறுகிய காலத்திலேயே நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது என்றார்.
சீன குடிமகனாக இருப்பதில் பெருமை அடைவதாக கூறிய அவர், 5 நட்சத்திரங்களை உடைய நமது சீன சிவப்பு கொடிக்கு உலகம் முழுவதும் மரியாதை கிடைக்கிறது என்றார்.
ஹாங்காங்கும், சீனாவும் தமது பிறப்பிடம் மட்டுமல்ல வீடு என்று கூறிய ஜாக்கிசான், ஹாங்காங்கில் விரைவில் அமைதி திரும்பும் என்று நம்புவதாகவும் கூறினார்.
Author: admin