சீனாவில் தொடரும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு..! சாலைகள், கட்டடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் மக்கள் தவிப்பு

சீனாவில் Hubei மாகாணத்தில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.
மத்திய சீனா மாகாணமான Hubei-யில் விடிய விடிய பெய்த மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டு கடும் போக்குவரத்து நெரிசல ஏற்பட்டது. தொடர்ந்து மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டு சாலை சீரமைக்கப்பட்டது.
அதேபோல் Henan மாகாணத்தில் கனமழை கொட்டியதால் தார்ச் சாலைகள், கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. வெள்ளத்தில் சிக்கிய மக்கள் மீட்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் மூலம் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Author: admin