முயற்சிகளில் தொடர் தோல்வியா? நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கச் செய்ய இந்த ஜோதிர்லிங்க மந்திரம் போதும்

ஜோதிர்லிங்க மந்திரம்

அந்த சிவபெருமானை ஜோதிர்லிங்கம் என்று அழைப்பதற்கு காரணம் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். இறைவனை தரிசித்தது, பூஜை செய்வதற்கு ஆரம்பகாலத்தில் எந்தவிதமான உருவ வழிபாடும் இல்லை. ஜோதி வடிவில் இறைவனை தரிசித்து வந்தார்கள். எந்தவித உருவ வழிபாடும் இல்லாமல் வழிபடுவது சிறந்ததாக கருதப்படவில்லை. சிவனுக்கு உருவ வழிபாடு கிடையாது. எம்பெருமான் ஜோதியில் இருந்து உருவாக்கப்பட்ட லிங்கம் என்பதால், ஜோதிர்லிங்கம் என்று அழைக்கப்பட்டார். எம்பெருமானை லிங்க வடிவில் தான் நாம் இதுநாள்வரை வணங்கி வருகின்றோம். ‘ஜோதி’ என்ற சொல் ‘ஒளி’ என்ற பொருளைக் குறிகின்றது. ஆகவே ஜோதிர்லிங்கம் என்றால் ஒளிமயமான லிங்கம் என்ற பொருளைத் தரும். ஜோதி லிங்க வடிவமும், சாதாரண லிங்க வடிவமும் பார்ப்பதற்கு ஒன்றுபோல் தான் தெரியும். ஆனால் சிவபெருமான் ருத்ரதாண்டவம் ஆடிய போது பூமியில் விழுந்த தீப்பிழம்புகள் ஜோதிலிங்கமாக உருவெடுத்து இருக்கின்றது என்று கூறுகிறது வரலாறு. இப்படி இந்தியாவில் 12 இடங்களில் ஜோதிர்லிங்க ஸ்தலங்கள் இருக்கின்றன. அவை

jyotirlingam2

1. சோமநாத் பிரபாக்ஷேத்ரம் கடற்கரை_குஜராத்

2. மல்லிகார்ஜுனர் ஸ்ரீசைலம்_ஆந்திர பிரதேசம்

3. மகா காளேஷ்வர் சிப்ரா நதிக்கரை, உஜ்ஜயினி அருகே_மத்திய பிரதேசம்

4. ஓம்காரேஷ்வர் நர்மதை நதிக்கரை, உஜ்ஜயினி – காண்ட்வா சாலை_மஹாராஷ்டிரா

5. வைத்யநாத் பரவி, ஜஸதி, சன்தால் பர்காணா_பீகார்

6. பீம் சங்கர் பீமா நதிக்கரை, நாசிக்கிலிருந்து 120கி.மீ._மஹாராஷ்டிரா

7. ராமேஸ்வரர், ராமேஸ்வரம்_தமிழ்நாடு

8. நாகேஷ்வரர் தாருகாவனம்_குஜராத்

9. விஸ்வநாத், காசி_உத்தர பிரதேசம்

10 திரியம்புகேஷ்வர் பிரம்மகிரி அருகில், நாசிக் அருகில்_மஹாராஷ்டிரா

11 கேதாரேஸ்வர் கேதார்நாத்_உத்தர பிரதேசம்

12 கிருஷ்ணேஷ்வர் பேரூல்_ஆந்திர பிரதேசம்

அந்த சிவபெருமானின் உடலில் இருந்து விழுந்த தீப்பிழம்புகளினால் உருவாக்கப்பட்ட ஜோதிர்லிங்க மூர்த்தியின் அருளை நாம் முழுமையாக பெறுவது நம் பாக்கியம். அப்படிப்பட்ட எம்பெருமானை மனதில் நினைத்து இந்த ஜோதிலிங்க மந்திரத்தை தினம்தோறும் மனதார உச்சரித்து வருவதன் மூலம் நம் பாவங்கள் நீக்கப்பட்டு, நாம் மேற்கொள்ளும் முயற்சிகளில் நிச்சயமாக வெற்றியை அடையலாம். மனதில் நினைக்கும் காரியத்தை செயல்படுத்தும் மனதைரியமானது நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் இந்த மந்திரத்தை உச்சரியுங்கள். உங்களுக்கான ஜோதிர்லிங்க மந்திரம் இதோ..

jyotirlingam1

ஜோதிர்லிங்க மந்திரம்:

செளராஷ்ட்ரே சோமனாதம்ஞ்ச ஸ்ரீஸைலே மல்லிகார்ஜூனம்

உஜ்ஜெய்ன்யாம் மஹாகாளம் ஓம்காராம் அமலேஸ்வரம்

ப்ரஜ்வஸ்யாம் வைத்யநாதாஞ்ச டாகின்யாம் பீமாஸங்கரம்

ஸேது பந்தேது ராமேஸம் நாகேஷம் தாருகாவனே

வாரணாஸ் யாந்து விஸ்வேஸம் த்ரயம்பகம் கெளதரீதே

ஹிமாலயேது கேதாரம் க்ருஸ் ணேஸம்ஞ்ச விஸாளகே

jyotirlingam

இந்த மந்திரத்தை தினம்தோறும் காலை எழுந்தவுடன் குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து, கண்களை மூடி முதலில் 11 முறை ‘ஓம் நமசிவாய மந்திரத்தை’ உச்சரித்து விட்டு மனதை ஒரு நிலைப்படுத்தி பின்பு எம்பெருமானின் ஜோதிலிங்கம் மந்திரத்தை உச்சரிப்பது மிகவும் சிறந்தது.

Author: admin