அவசர தேவைக்கு உடனடியாக, இப்பவே பணம் வேணுமா? இந்த 3 எண்களை, 3 முறை எழுதிப் பாருங்கள்! நடக்கும் அதிசயத்தை.

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்குமே கட்டாயம் பணத் தேவை இருக்கின்றது. பணம் இல்லாமல் நம்முடைய வாழ்க்கையை ஒரு நிமிடம் கூட வாழ முடியாது. இந்த பணம் பல நேரங்களில் பல விதமான அனுபவங்களை நமக்கு உணர்த்திவிடும். வாழ்க்கை என்றால் என்ன என்பதை காசு இருக்கும்போது நாம் கற்றுக் கொள்வதைவிட, காசு இல்லாத போது கற்றுக்கொள்ளும் பாடம் தான் நிறையவே இருக்கும். சரி, எல்லாம் போகட்டும். அவசர தேவைக்கு உடனடியாக பணம் தேவைப்படுகிறது. எவ்வளவோ முயற்சி செய்து பார்த்து விட்டோம், ஆனால் பணம் மட்டும் கைக்கு கிடைக்கவில்லை.

numbers

கழுத்தை நெறிக்கும் அளவிற்கு கடன் தொல்லை. (கடன் என்பது ஒரு உதாரணத்திற்காக தான். உங்கள் அவசரத்திற்கு எந்த தேவைக்காக பணம் வேண்டும் என்றாலும் இந்த ட்ரிக்கை பயன்படுத்திக் கொள்ளலாம்.) பண கஷ்டத்தில் இருந்து உடனடியாக தப்பிக்க என்ன தான் வழி. உடனடி பணத்தேவைக்கு ஏதாவது ஒரு மந்திர தந்திர வித்தைகள் இருந்தால் சொல்லுங்களேன் என்று கேட்பவர்களுக்காகவே இந்த பதிவு. அதற்காக மந்திர தந்திர மாய வித்தைகளை எல்லாம் நாம் செய்யப்போவது கிடையாது. 3 எண்கள் உள்ளது. இந்த மூன்று எண்கள் உங்களுக்கும், இந்த பிரபஞ்சத்திற்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தி, உங்களுக்கு தேவையான பணத்தை உங்கள் கைகளில் கொண்டு வந்து சேர்க்கும்.

மிக மிக அவசரமான தேவைக்கு, அவசரமான சூழ்நிலையில் இதை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். பொய்யாக இதை முயற்சிசெய்து, இது பலிக்குமா, என்று சோதித்துப் பார்த்தால் நிச்சயமாக இந்த முறை பலன் தராது. ஆழ்மனதில் இதன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இந்த நம்பரை எழுதினால் இந்த பிரபஞ்சம் உங்களுக்கு பணத்தைக் கொடுக்கும் என்று ஒரு துளி கூட சந்தேகம் இல்லாமல், இதை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.

numbers1

உடனடி பணத்தேவையை பூர்த்தி செய்யக்கூடிய எண் ‘897’. இந்த நம்பரை மனப்பூர்வமாக பச்சை நிறப் பேனா கொண்டு எழுதினால் உங்களுடைய அவசர தேவைக்கு, தேவையான பணம் உங்கள் கைகளை வந்து சேரும். இந்த நம்பரை எங்கு எழுத வேண்டும். எப்படி எழுத வேண்டும். இதை ஒரு பேப்பரில் எழுதுவதைவிட, உங்களுடைய உடம்பில் எழுதுவது மிகவும் நல்லது.

பச்சை நிற பேனாவை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய உடம்பில் எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் இந்த நம்பரை எழுதலாம். இந்த நம்பரை எழுதி வைத்திருப்பது வெளியாட்களுக்கு தெரிந்தால் என்ன என்று கேட்பார்கள் எனும் பட்சத்தில், உங்களுடைய உடம்புக்குள் ஆடை மறைக்கப்பட்ட இடத்தில் வெளியே தெரியாது அளவிற்கும் எழுதிக் கொள்ளலாம். ‘897’ என்ற நம்பரை 3 முறை எழுத வேண்டும். எழுதும்போது, உங்கள் கைக்கு உங்கள் அவசர தேவைக்கு, தேவையான பணம் கிடைத்து விட்டதாகவும், அந்தப் பணம் உங்களுடைய கைக்கு வந்து விட்டதாகவும், அந்தப் பணத்தை உங்களுடைய கையால் தொடுவது போலவும், எல்லாம் நல்லபடியாக நடந்து முடிந்து விட்டதாகவும் நினைத்துக் கொண்டு எழுத வேண்டும். பச்சை நிற பேனாவை பயன்படுத்துங்கள்.

cash

இப்படி ஒரு நம்பரை எழுதி விட்டால் நமக்கு பணம் கிடைத்து விடுமா என்ற சந்தேகம் உங்கள் மனதில் ஒரு துளி வந்தாலும் இதை நீங்கள் முயற்சி செய்யவேண்டாம். ஒன்பது எண்களிலும், ஒன்பது கிரகங்களின் ஆதிக்கம், அடங்கித்தான் உள்ளது. இதில் ஒவ்வொரு எண்ணுக்குள்ளும் ஒரு சக்தி மறைந்து தான் உள்ளது. நம்பிக்கையோடு இந்த நம்பரை எழுதும் பட்சத்தில், நம்முடைய கெட்ட நேரத்தையும் நல்ல நேரமாக மாற்றி, நம் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய சக்தி, எண்களில் உள்ளது என்பதை சித்தர்கள் உணர்ந்திருந்தார்கள். சித்தர்களால் சொல்லப்பட்ட பல விஷயங்கள் இன்று வெவ்வேறு வடிவம் எடுத்து, வெவ்வேறு பெயர்களில் சாஸ்திர சம்பிரதாயங்கள் ஆக, சூட்சம முறைகளாக கற்றுத் தரப்படுகின்றது. அதில் ஒரு முறை தான் இதுவும்.

money4

இந்த ட்ரிக்கை எத்தனை முறை பயன்படுத்தலாம். அடிக்கடி பயன்படுத்தக்கூடாது. அவசர தேவைக்காக மட்டும் ஒரே ஒரு முறை ட்ரை பண்ணி பார்க்க வேண்டும். 24 மணி நேரத்திற்குள் நடக்கவில்லை என்றால், மீண்டும் மீண்டும் முயற்சி செய்வதில் எந்த ஒரு பிரயோஜனமும் இருக்காது. நமக்கு அவசர தேவை என்பது எப்பவாவது ஒரு முறை தான் இருக்கும் அல்லவா. அப்போது மட்டும் இத யூஸ் பண்ணிக்கோங்க. நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்த்து பலன் அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Author: admin