1 கிலோ சின்ன வெங்காயத்தை கஷ்டமே இல்லாமல், தோல் உரிக்க வேண்டுமா? வெறும் 3 நிமிடம் போதுமே! இந்த ஐடியாவை மிஸ் பண்ணாம நீங்களும் தெரிஞ்சு வெச்சுக்கோங்க.

சமையல் அறையில் இருக்கக்கூடிய கஷ்டமான வேலைகளில் இந்த இரண்டு வேலைகளும் அடங்கும். சின்ன வெங்காயம் தோல் உரிப்பது, தேங்காய் துருவுவது. இந்த இரண்டு வேலைகளை சுலபமாக முடிப்பதற்கு ஒரு ஐடியா கிடைத்தால் சந்தோஷமாகத்தான் இருக்கும் என்று நினைக்கும் இல்லத்தரசிகளுக்காகவே இந்த பதிவு. சின்ன வெங்காயத்தில் இருந்து தோலை சுலபமாக எப்படி எடுப்பது? தேங்காய் மூடியில் இருந்து கருப்பு இல்லாமல் தேங்காய் துருவலை சுலபமாக எப்படி எடுப்பது? இரண்டு சூப்பர் ஐடியாவை இந்தக் குறிப்பின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

chinna-vengayam1

முதலில் சின்ன வெங்காயத்தை எப்படி சுலபமாக உரிப்பது என்று தெரிந்து கொள்வோமா. தேவையான அளவு சின்ன வெங்காயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை இட்லி தட்டில் பரவலாக அடுக்கி வைக்கவேண்டும். அந்தத் தட்டை அப்படியே இட்லி வேகவைப்பது போல இட்லி குண்டானில் வைத்து ஆவியில் 3 நிமிடங்கள் வேக வைத்து எடுக்க வேண்டும். வெங்காயம் கூட சூடாக கூடாது. இட்லி தட்டின் மேலே இருக்கும் ஆவி, வெங்காயத்தின் தோல் மீது பட்டிருக்கும். வெங்காயத்தின் தோல் மட்டும் தான் கை பொறுக்கும் அளவிற்கு சூடாக இருக்கும்.

அவ்வளவு தான். இப்போது இந்த வெங்காயம் நீங்கள் கையில் தொடும் சூட்டில் தான் இருக்கும். அப்படியே இட்லி பானையில் இருக்கும் இட்லி தட்டை வெளியே எடுத்து வைத்துவிட்டு, ஒவ்வொரு வெங்காயமாக எடுத்து உங்கள் கையாலேயே காம்புகளை நீக்கி தோலை உரித்தால், சுலபமாக தோல் வந்துவிடும். வெங்காயத்தின் சுவையிலும் எந்த மாற்றமும் இருக்காது. வெங்காயம் வெந்தும் போகாது.

chinna-vengayam2

இப்படி தோலுரித்த வெங்காயங்களை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு, மூடி ஃபிரிட்ஜில் ஸ்டோர் செய்தும் வைத்துக்கொள்ளலாம். நேரம் கிடைக்கும் போது இதை முயற்சி செய்து பாருங்கள். 1 கிலோ சின்ன வெங்காயத்தை 3 நிமிடங்கள் வேக வைத்தால், தோல் உரிப்பதற்கு 15 நிமிடங்கள் மட்டுமே எடுக்கும்.

அடுத்தபடியாக தேங்காய் மூடியில் இருந்து தேங்காய் துருவலை சுலபமாக எப்படி எடுப்பது. சில பேர் இந்த தேங்காய் மூடியை அப்படியே கேஸ் நெருப்பின் மேலே வைத்து, உள்ளே இருக்கும் தேங்காய் பத்தைகளை நீக்கி எடுப்பார்கள். இதன் மூலம் தேங்காய் ஓடு நெருப்பில் கருகிய வாடை வரும். அதுமட்டுமல்லாமல் இதில் கொஞ்சம் ரிஸ்க் கூட உள்ளது.

coconut1

தேங்காயை உடைத்த உடன், தேங்காய் மூடிகளை இட்லி தட்டின் மேல் வைத்து கொள்ளுங்கள். இட்லி குண்டானில் இந்த தட்டை வைத்து நான்கிலிருந்து ஐந்து நிமிடங்கள் ஆவியில் அப்படியே வேக வைக்க வேண்டும். இட்லி பானையில் மூடி போட்டு தான் வேக வைக்க வேண்டும். சின்ன வெங்காயத்தை மூன்று நிமிடங்கள் வேக வைக்கவேண்டும். தேங்காயை நான்கிலிருந்து ஐந்து நிமிடங்கள் வரை ஆவியில் அப்படியே வைக்கலாம்.

coconut2

5 நிமிடங்கள் கழித்து இட்லி மூடியை திறந்து தேங்காய் மூடியில் இருந்து தேங்காயை, ஒரு சிறிய கத்தியை வைத்து தோண்டி எடுத்தால் அப்படியே பாதி மூடி முழுசாக கிடைக்கும். இந்த தேங்காய் மூடியின் மேல் இருக்கும் கருப்பு நிற தோலை, காய்கறிகள் தோல் சீவியின் மூலம், சீவி எடுத்து விடலாம். இப்போது பாதி மூடி நமக்கு வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த தேங்காய் மூடியை நீளவாக்கில் கத்தியால் வெட்டி மிக்ஸி ஜாரில் போட்டு, மிக்ஸியை இரண்டு அல்லது மூன்று சுற்று ஓட விட்டால் துருவிய தேங்காய் கருப்பு இல்லாமல் தயாராகியிருக்கும். இதை அப்படியே ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு மூடி போட்டு ஃப்ரீசரில் வைத்துவிடுங்கள். ஒரு மாதம் வரை கூட இந்த தேங்காய் துருவலை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்து இருந்தால் உங்களுடைய வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.

Author: admin