கேரளா: 73 வயது மூதாட்டிக்கு ஜிகா வைரஸ் உறுதி: பாதித்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வு

(கோப்பு புகைப்படம்)

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் மூதாட்டி ஒருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.

ஜிகா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் நிலையில், மத்திய அரசின் நிபுணர் குழு அங்கு சென்றுள்ளது. திருவனந்தபுரம் சென்றுள்ள அந்தக்குழுவில் 7 பேர் இடம்பெற்றுள்ளனர். நோய் பரவலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுத்திருப்பதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

 

Author: sivapriya