வரலாற்றில் இன்று

•1223 – இரண்டாம் பிலிப்பு இறந்ததை அடுத்து அவரது மகன் எட்டாம் லூயி பிரான்சின் மன்னராக முடிசூடினார்.
•1789 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிசு மக்கள் பாஸ்டில் சிறையைத் தகர்த்து சிறைக் கைதிகளை விடுவித்து இராணுவத் தளவாடங்களைக் கைப்பற்றினர்.
•1791 – இங்கிலாந்துத் திருச்சபைக்கு எதிரானவர்கள் மீது கலவரம் ஆரம்பித்ததை அடுத்து, பிரெஞ்சுப் புரட்சியின் ஆதரவாளரான சோசப்பு பிரீசிட்லி பர்மிங்காமில் இருந்து வெளியேறினார்.
•1798 – அமெரிக்க அரசைப் பற்றி அவதூறாகவோ, பொய்யாகவோ எழுதுவது, பிரசுரிப்பது குற்றமாக ஐக்கிய அமெரிக்காவில் சட்டம் இயற்றப்பட்டது.
•1814 – இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
•1874 – சிகாகோவில் ஏற்பட்ட தீ விபத்தில் நகரின் 47 ஏக்கர்கள் அழிந்தது. 20 பேர் உயிரிழந்தனர். 812 கட்டடங்கள் சேதமடைந்தன.
•1889 – பாரிசில் கூடிய சோசலிசத் தொழிலாளர்களின் “பன்னாட்டுத் தொழிலாளர் நாடாளுமன்ற” நிகழ்வுகளில் பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் பங்கேற்றனர். கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி வேலை-நேரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என முடிவாகியது.
•1900 – சீனாவுக்கு எதிரான எட்டு நாடுகள் கூட்டணி தியென்சினைக் கைப்பற்றியது.
•1933 – செருமனியில் நாட்சி கட்சி தவிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் தடை செய்யப்பட்டன.
•1938 – அவார்ட் இயூசு உலகைச் சுற்றி 91-மணி நேரத்தில் விமானத்தில் பறந்து உலக சாதனையை ஏற்படுத்தினார்.
•1948 – இத்தாலியின் கம்யூனிசக் கட்சியின் தலைவர் பல்மீரோ டொக்ளியாட்டி நாடாளுமன்றத்துக்கு முன்னர் சுடப்பட்டார்.
•1958 – ஈராக்கியப் புரட்சி: ஈராக்கில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. அப்துல் கரீம் காசிம் நாட்டின் புதிய தலவரானார்.
•1965 – மரைனர் 4 விண்கலம் செவ்வாய்க் கோளுக்குக் கிட்டவாகச் சென்று முதற்தடவையாக வேறொரு கோளின் மிக அண்மையான படங்களைப் பூமிக்கு அனுப்பியது.
•1966 – குவாத்தமாலா நகரில் மனநோய் வைத்தியசாலையில் இடம்பெற்ற தீவிபத்தில் 225 பேர் கொல்லப்பட்டனர்.
•1967 – நாசாவின் சேர்வெயர் 4 ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது.