அழுக்கு படிந்த மிக்சியை 5 நிமிடத்தில் புதிதாக்க இதை மட்டும் செஞ்சி பாருங்க. இனிமே உங்க வீட்டு மிக்சி எப்போவுமே புதுசு போலவே பல பலனு இருக்கும்.

வீட்டில் சமையலறையில் தினமும் பயன்படுத்தும் ஒரு முக்கியமான பொருள் மிக்ஸி. ஒரு நாளில் ஒரு வேலையாவது சமையலுக்கு மிக்ஸியை பயன்படுத்துகின்றோம். சமையலில் நேரத்தை மிச்சப்படுத்தவும் வேலையை சுலபமாக்கவும் பயன்படும் இந்த மிக்ஸியை பலரும் சரியாக பராமரிப்பது என்பது கிடையாது. அவசரத்திற்கு பயன்படுத்தி விட்டு அதனை சுத்தம் கூட செய்யாமல் அப்படியே விட்டு விடுகிறார்கள். அதன் மீது படிந்துள்ள தண்ணீர் மற்றும் விழுதுகள் மிக்ஸியின் மீது கரையாக படிந்துவிடுகின்றன. இதனை எவ்வாறு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சுத்தம் செய்து மிக்ஸியை புதுசு போல் மாற்றுவது என்பதை பற்றிதான் இங்கு பார்க்கப் போகிறோம்.

old mixi

முதலில் மிக்ஸியை சுத்தம் செய்வதற்கு முன்னர் அதனை நாம் பயன்படுத்தும் கரண்ட் பாக்ஸிலிருந்து பிரித்து எடுத்து தனியாக வைக்க வேண்டும். இது ஒரு முக்கியமான பின்பற்றவேண்டிய குறிப்பாகும். ஏனெனில் மின்சாரத்தில் இணைத்துள்ள பொழுதே நீங்கள் சுத்தம் செய்தால் மின்சாரம் பாய்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே எப்போது சுத்தம் செய்வதாக இருந்தாலும் மிக்ஸியை தனியாக எடுத்து வைத்து தான் சுத்தம் செய்ய வேண்டும்.

சுத்தம் செய்வதற்கு என்று பணம் செலவழித்து தனியாக பொருட்கள் எதுவும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் வீட்டில் நீங்கள் தினமும் பயன்படுத்தும் பொருட்களை வைத்தே எளிமையாக சுத்தம் செய்யலாம். இங்கு எளிய முறையில் சுத்தம் செய்ய 3 விதமான குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் எதைவேண்டுமானலும் நீங்கள் பின்பற்றிக்கொள்ளலாம்.

Mixi

சுத்தம் செய்வதற்காக தேவைப்படும் பொருட்கள் :

எலுமிச்சை பழம், சோடா உப்பு, வினிகர், டூத் பேஸ்ட், டூத் பிரஷ், பட்ஸ், பாத்திரம் துலக்கும் ஸ்கிரப்பர்.

சுத்தம் செய்யும் முறை –1 :

ஒரு சிறிய தட்டு அல்லது கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் சோடா உப்பு அதனுடன் ஒரு எலுமிச்சை பழத்தின் சாரை பிழிந்து இவற்றை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இவற்றை ஒன்றாக கலக்கும் பொழுது நன்றாக நுரை பொங்கி வரும். பிறகு ஸ்கிரப்பர் பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக தொட்டு மிக்ஸி முழுவதும் தடவி விட வேண்டும். சிறிது நேரம் ஊறிய பின்னர் ஸ்கிரப்பர் வைத்து தேய்க்க வேண்டும். ஸ்கிரப்பர் வைத்து தேய்க்க முடியாத இடங்களை டூத் பிரஷ் வைத்து நன்றாக தேய்த்து எடுக்கலாம். பின்னர் சிறு சிறு துவாரங்கள் மற்றும் சிறிய இடுக்குகளில் டூத்பிக் அல்லது பட்ஸ் வைத்து சுத்தம் செய்யலாம். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு துணியை நனைத்து துடைத்து எடுக்க வேண்டும்.

சுத்தம் செய்யும் முறை – 2 :

ஒரு சிறிய கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் சோடா உப்பு, சிறிதளவு வினிகர் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதனை ஸ்கிரப்பர் பயன்படுத்தி நனைத்து எடுத்து மிக்ஸி முழுவதும் தடவி விடவேண்டும். சிறிது நேரத்தில் அழுக்குகள் எல்லாம் ஊறிவிடும். அதன்பிறகு ஸ்கிரப்பர் வைத்து தேய்த்தும் மற்றும் மேற்கூறிய பொருட்கள் வைத்து நன்றாக சுத்தம் செய்தும் பின்னர் ஈரத் துணியை வைத்துத் துடைத்து எடுக்க வேண்டும்.

mixi

சுத்தம் செய்யும் முறை – 3 :

எலுமிச்சை பழம், வினிகர், சோடா மாவு இவற்றில் ஏதேனும் ஒன்று சில சமயங்களில் வீட்டில் இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் பல் துலக்கும் டூத் பேஸ்ட் எப்போதும் எல்லோர் வீட்டிலும் இருக்கும். இந்த டூத் பேஸ்ட்டை ஸ்கிரப்பரில் கொஞ்சம் அதிகமாக தடவிக்கொண்டு மிக்ஸி முழுவதும் பூசி விடவேண்டும். சிறிது நேரத்தில் மிக்சியில் உள்ள பிசுக்குகள் எல்லாம் நன்றாக ஊறிவிடும். பின்னர் சுத்தம் செய்ய எடுத்து வைத்துள்ள பொருட்களை பயன்படுத்தி நன்றாக தேய்த்து எடுக்க வேண்டும். அதன் பின்னர் ஈர துணி வைத்து துடைத்து எடுக்கலாம்.

மேற்கூறிய இந்த மூன்று முறைகளில் ஏதேனும் ஒரு முறையை பயன்படுத்தி நீங்கள் சுத்தம் செய்து பாருங்கள் உங்களது பழைய மிக்ஸி யாரும் நம்ப முடியாத அளவிற்கு புது மிக்ஸியை போல பளபளவென்று மாறி இருக்கும்.

Author: admin