சினிமாவிற்கு வருவதற்கு முன் 750 ருபாய் சம்பளத்துக்கு அந்த வேலையை பார்த்த விஜய் சேதுபதி !! இந்த மனுஷன் ரொம்ப பாவம்யா !!

தற்சமயம் இந்திய சினிமாவில் அதிக டிமாண்ட் உள்ள நடிகராக மாறி உள்ளார் விஜய் சேதுபதி. இவ்வளவுக்கும் காரணம் விஜய்யின் மாஸ்டர் படம் தான் என்றால் நம்ப முடிகிறதா. விஜய்யின் கேரக்டரை குறைத்து பேச வேண்டும் என்பதற்காகவே விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரத்தை தூக்கி பேசி அவரை ஹீரோவாக்கி விட்டனர்.

உண்மையில் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி நடித்த பவானி கேரக்டர் சாதாரண ஒரு வில்லன் கதாபாத்திரம் தான். விஜய் சேதுபதியும் சும்மா சொல்லக்கூடாது, சாதாரண கதாபாத்திரமாக இருந்தாலும் அதை தனக்கு ஏற்ற கதாபாத்திரமாக எப்படி மாற்றவேண்டும் என்ற வித்தை தெரிந்தவர்.

அதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் வெளியான உப்பண்ணா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று அங்கேயும் வசூலை குவிக்க தற்போது தெலுங்கு முன்னணி நடிகர்களும் விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்போது ஏகப்பட்ட படங்கள் கமிட்டாகி கோடியில் சம்பளம் வாங்கும் விஜய் சேதுபதி ஆரம்பத்தில் சாதாரண வேலைகளை தான் செய்துள்ளார்.

நடிக்க வருவதற்கு முன்பு கொண்டாட்டத்தில் ஒரு ஃபாஸ்ட் ஃபுட் கடையில் ரூபாய் 750 சம்பளத்துக்கு வேலை செய்ததாக தெரிவித்துள்ளார். இரவு 7.30ல் இருந்து 12.30 மணி வரை வேலை செய்தேன்.

டெலிபோன் பூத்தில் கூட தான் பணிபுரிந்ததாக கூறியிருக்கிறார்.இதைத்தெரிந்துகொண்ட ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

Author: admin