வடக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

வடக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில் பேசிய அவர், வடக்கு வங்க கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவாக இல்லாத காரணத்தினால் தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பெய்யக்கூடிய பருவமழையும் வலுவாக பெய்யவில்லை என தெரிவித்தார்.
தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இயல்பை விட 76 விழுக்காடு அதிகம் பெய்துள்ளது என்றும், தற்பொழுது தமிழ்நாட்டில் வெகுவாக குறைந்து உள்ள மழை, வரக்கூடிய மூன்று நாட்களுக்குப் பிறகாக மீண்டும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.
Author: admin