கொரோனா மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கையை வானிலை அறிக்கை போல கருத வேண்டாம் – நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் .வி.கே.பால்

கொரோனா மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கையை வானிலை அறிக்கை போல கருத வேண்டாம் என்று கொரோனா தடுப்புப் பிரிவின் தலைவரும் நிதி ஆயோக் உறுப்பினருமான டாக்டர் .வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
உலகின் சில நாடுகளில் கொரோனா 3 வது அலை வேகம் எடுத்து வருகிறது. இது இந்தியாவுக்குள் பரவாமல் இருக்க மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஊரடங்குகள் தளர்த்தப்பட்டதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் பெரும்திரளாகக் கூடுவதும் சுற்றுலா செல்வதும் மிகுந்த கவலையை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
சென்னை ரங்கநாதன் தெரு ,டெல்லி சதார் பஜார்,இறைச்சி மீன் சந்தைகள், மலை சுற்றுலாத் தலங்கள் போன்றவற்றில் அதிகளவில் மக்கள் கூட்டம் காணப்படுகிறது.
2வது அலை முழுவதுமாக ஓயாத நிலையில் இது 3வது அலை தொடக்கத்துக்கும் காரணமாக இருக்கும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.நமது பொறுப்பற்ற செயல்களால் தான் 3வது அலை உருவாகி பரவும் என்றும் டாக்டர் வி.கே.பால் சுட்டிக் காட்டியுள்ளார்.
Author: admin